என்புருக்கி நோயும் அதனை தவிர்ப்பதற்கான வழிகளும்-Dr பீற்றர் குருசுமுத்து (MBBS, FRACP)

என்புருக்கி நோய் எனப்படும் ஒஸ்ரியோ போரொஸிஸ் (Osteoporosis) என்பது எலும்புகள் சம்பந்தப்பட்ட வியாதியாகும். எலும்புகள் அவற்றின் அடர்த்திகளை இழப்பதும் மற்றும் உடையத் தொடங்கும் நிலையை அடைவதுமான நிலை. இது ஆண்களைவிட பெண்களுக்கே மிகவும் அதிகமாக ஏற்படுகின்றது.

உலகில் கொக்கேசியன் சனத்தொகையில் 15 வீதமான ஆட்களுக்கு அவர்களுடைய 50 வயதிலும் 70 வீதமான கொக்கேசியன்களுக்கு 80 வயதிலும் இந்த நோய் ஏற்படுவதாக ஒரு அறிக்கை தெரிவிக்கின்றது. ஐரோப்பிய கண்டத்தில் 22 மில்லியன் பெண்களும் 5.5 மில்லியன் ஆண்களும் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக 2010ஆம் ஆண்டு வெளியான அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

இந்த என்புருக்கி நோயின் தன்மையினை பார்ப்போமானால், எங்களது இளம் பராயத்தில் எமது எலும்புகளில் கல்சியம் படிவதால், எலும்புகளின் அடர்த்தி அதிகரிக்கின்றது. இந்த கல்சியம் அடர்த்தி செயற்பாடானது 30 வயது வரை கூடிக்கொண்டு போய் அதி உச்சமான நிலையை அடையும் (This is called peak bone mass index). 30 வயதிற்குப் பின்னர் எமது எலும்புகளில் படிந்திருக்கும் கல்சியம் ஆண்களிலும் சரி. பெண்களிலும் சரி, தொடர்ச்சியாக மெதுவாக இழக்கப்படுவதால், எலும்புகளின் அடர்த்தி குறையத் தொடங்கும்.webmd rm photo of porous bones என்புருக்கி நோயும் அதனை தவிர்ப்பதற்கான வழிகளும்-Dr பீற்றர் குருசுமுத்து (MBBS, FRACP)

முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில், இளம் வயதில் நாங்கள் கவனமாக இருந்தோமானால், கல்சியம் உயர்வான உணவுகளை உட்கொள்வதன் மூலம் எமது எலும்புகளில் கல்சியத்தின் அளவை கூட்டி வைத்திருப்போமானால், வயதுமுதிர்ந்த  நிலையில் கல்சியம் குறையத் தொடங்கினாலும் நாங்கள் என்புருக்கி நோயிலிருந்து  தப்பிக்கக் கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது.

பெண்களின் மாதவிடாய் நின்ற பின்பு அதாவது மெனோபொஸ் இற்கு பின்னர் கல்சிய அடர்த்தி குறையும் வீதம் இரண்டு மடங்காக அதிகரிக்கின்றது. ஆகவே பெண்களின் வயது 50 – 60 இடைப்பட்ட காலத்தில் எலும்புகளிலிருந்து கல்சியம் இழக்கப்படுகின்றது இரட்டிப்பாகப் போவதனால், என்புருக்கி நோய் ஏற்படுவதற்குரிய சந்தர்ப்பங்கள் அதிகமாகின்றது. இதற்குக் காரணம் மெனோபொஸ்  நேரங்களில் ஈஸ்ரோஜன் ஹோமோன் குறைவதனால் ஏற்படுகின்றது. ஆண்களில் ரெஸ்ரொஸ்ரரோன்  ஹோமோன் 70 வயது வரை இருப்பதால், அவர்களின் இழப்பு பெண்களை விட குறைவாக இருக்கும். இதனால் தான் பெண்களுக்கு கூடுதலாக ஒஸ்ரியோ போரெரஸிஸ் ஏற்படுகின்றது.thumbnail 5ADCD1750DCA40F68AFE70D92B0EB363 என்புருக்கி நோயும் அதனை தவிர்ப்பதற்கான வழிகளும்-Dr பீற்றர் குருசுமுத்து (MBBS, FRACP)  இந்த என்புருக்கி நோய்க்குரிய பிரச்சினையான விடயம் என்னவெனில், இதை ஆரம்ப நிலையில் அறிவது மிகவும் கடினம். இந்த நோய் ஏற்பட்ட பிறகு எங்கள் உடலில் சில மாற்றங்கள் ஏற்படலாம். உதாரணமாக எமது முதுகு எலும்பு உயரம் குறையத் தொடங்குவதால் ஒருவர் கூனிப் போவதோ, அல்லது முதுகு எலும்பு நோ ஏற்படுவதை நாங்கள் பார்க்கலாம். ஆனால் என்புருக்கி நோய் ஏற்பட்ட பின்னர் இந்த அறிகுறிகள் ஏற்படுகின்றது.

மேலும் என்புருக்கி நோய் ஏற்படும் பொழுது எங்களின் எலும்புகள் இலகுவாக உடையக் கூடிய தன்மை ஏற்படுவதால், ஏதாவது காரணங்களினால் நாம் நிற்கும் உயரத்தில் இருந்து விழுந்தால் எலும்புகள் உடையக் கூடிய ஆபத்துள்ளது. இதனைவிட சில நேரங்களில் எலும்புகள் தானாகவே உடைந்து விழும் நிலை ஏற்படுகின்றது. அப்படி விழுவதனால், அவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்படுவதாலும் மற்றும் விழுவதால் ஏற்படும் காயங்களினாலும், அவர்களின் இறப்பு வீதமும், காயமடையும் விகிதமும்  அதிகரிக்கின்றது.  இதனால் அவர்கள் சுயாதீனமாக நடக்கும் ஆற்றலை இழக்கின்றார்கள். அதிகமானவர்கள் இதனால் வீட்டிலிருந்து பராமரிக்க முடியாமல் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்படும் நிலை ஏற்படுகின்றது.

எப்படி கண்டறிதல்

பெண்களுக்கு 50 வயதிற்குப் பின்னரும், ஆண்களுக்கு விழுவதன் மூலம் எலும்பு முறிவு ஏற்படுமாயிருந்தால், நாங்கள் எலும்பு  அடர்த்தியை அளக்கக்கூடிய  ஒளிப்படங்களை (Bone mineral density test)  எடுத்துப் பார்த்தால் இதை இலகுவாக அறிய முடியும். இதனால் 3 விதமான முடிவுகளை பார்க்கலாம், 1 சாதாரண நிலை, 2. என்புருக்கி நோய் ஏற்பட முன்னுள்ளநிலை (osteopenia) 3. என்புருக்கி நோயின் நிலை.  இதை விட உங்களுக்கு வேறு மருத்துவ நோய்கள் இருந்தால், உதாரணமாக இளமையில் மெனோபொஸ் நிலையை அடைந்திருப்பீர்களானால், அல்லது உங்களுக்கு தைரொயிட் அல்லது பரா தைரொயிட் பிரச்சினை இருக்குமானால், அல்லது நீங்கள் அதிகளவு புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களாயின், அல்லது உங்களுக்கு பரம்பரை என்புருக்கி நோய் நிலை இருக்குமாக இருந்தால், இதற்கு முன்னரே எலும்பு அடர்த்தி பரிசோதனை செய்வது அவசியமாகும் (வளர்ந்த நாடுகளில் பெண்களின் 50 வயதிற்குப் பின்னர் எலும்பு அடர்த்தி அளவிடப்படுவது கட்டாயமானதாகும்).

எப்படி சிகிச்சை அளிப்பது அல்லது கையாளுவது

உங்களுக்கு என்புருக்கி நோய் இருந்தால், உங்களின் கல்சியம், விற்றமின்-D அளவை அதிகரிக்க வேண்டும்.  விற்றமின்-D இன் அளவை 75ng/ml இற்கு மேல் வைத்திருப்பது அவசியமானது. 75ng/ml இற்கு குறைவாக இருந்தால் விற்றமின்-D  மாத்திரைகள் எடுக்க வேண்டும். மாதவிடாய் நிற்பதற்கு முற்பட்ட காலங்களில் கல்சியம் மாத்திரையை கட்டாயமாக எடுப்பது முக்கியம்.  இவற்றை தவிர மேலதிகமான சிறப்பு மருந்துகளையும் நாங்கள் உட்கொள்ள வேண்டியிருக்கும். இவை உங்கள் எலும்பு அடர்த்தியை அதிகரிக்கும் மருந்துகள். இது தொடர்பில் நீங்கள் உங்கள் குடும்பநல மருத்துவருடன் பேசலாம்.

மேலும் என்புருக்கி நோய் இருந்தால், நீங்கள் விழும் சூழ்நிலைகளை தவிர்த்தல் வேண்டும். உங்களுக்கு என்புருக்கி நோய் இருந்தால். நீங்கள் நிற்கும் உயரத்தில் இருந்து விழுந்தால்கூட எலும்புகள் உடையும் சந்தர்ப்பம் ஏற்படும். இதனைவிட நீங்கள் புகைப்பிடிப்பவர்களாக இருந்தால் நிச்சயம் அதை நிறுத்த வேண்டும்.  மதுபானங்களையும் குறைப்பது மிகவும் அவசியமானது.

அத்துடன் நடந்து கொண்டு செய்யும் உடற்பயிற்சிகளை 20 நிமிடங்கள் ஒரு கிழமைக்கு 5 தடவை செய்தால், அது உங்கள் எலும்புகளின் அடர்த்தியை கூட்டுவதற்கு உதவும்.

முற்பாதுகாப்பு

50 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொருவரும் கல்சியம் மாத்திரை கட்டாயம் எடுக்க வேண்டும். உங்கள் உணவுகளில் கல்சியம், விற்றமின்-D குறைவாக இருக்குமானால், நீங்கள் இவை இரண்டையும் மாத்திரைகளாக எடுக்க வேண்டும்.

இதனை விட கல்சியம் அதிகமாக உள்ள உணவுப் பொருட்களை நீங்கள் உண்ண வேண்டியது மிகவும் அவசியமானதாகும். பால், யோக்கட், சீஸ், போன்றவற்றில் அதிகமான கல்சியம் இருப்பதால் நீங்கள் அவற்றை உட்கொள்ள வேண்டும்.dr l என்புருக்கி நோயும் அதனை தவிர்ப்பதற்கான வழிகளும்-Dr பீற்றர் குருசுமுத்து (MBBS, FRACP)

மற்றும் விற்றமின்-D செறிவாக உள்ள உணவுப் பொருட்களையும் உட்கொள்ள வேண்டும்.  விற்றமின்-D யை எமது தோல் சூரிய ஒளியிலிருந்து உருவாக்குகின்றது. ஒரு கிழமையில் 5 நாட்கள் 20 நிமிடங்கள் காலை வெய்யிலில் நாங்கள் நிற்போமாக இருந்தால் விற்றமின்-D அளவு கூடும்.

அத்துடன் ரியூனா, சல்மன் மீன்களிலும் மற்றும் பச்சை இலை, காய்கறிகள், புறொக்கோலியிலும் அதிகளவான விற்றமின் னு இருக்கின்றது. இதனைவிட சில பொருட்களிலும் விற்றமின்-D சேர்க்கப்பட்டிருக்கும்.

என்புருக்கி நோய் என்பது ஒரு முக்கியமான எலும்பு வியாதியாகும். எந்த வயதிலும் இதை தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முக்கியமாக சிறு பராயத்திலிருந்தே கல்சியம், விற்றமின்-D உள்ள பொருட்களை சாப்பிடுவதன் மூலம் இதற்குரிய சந்தர்ப்பத்தைக் குறைக்கலாம்.

Dr Peter Kurusumuthu (MBBS, FRACP)
Consultant Geriatrician
Department of Geriatrics,
Blacktown and Mount Druitt Hospitals
Conjoint Senior Lecturer
School of Medicine,
Western Sydney University