கொரோனாவால் பட்டினிச்சாவுகள் நிகழும் – ஐ.நா எச்சரிக்கை

110
150 Views

உள்நாட்டுக் குழப்பங்கள் மற்றும் வறுமைகளால் பாதிக்கப்பட்ட நாடுகள் கொரோனாவினால் மேலும் கடுமையாகப் பாதிப்படையும் என ஐ.நா எச்சரித்துள்ளது.

உலக உணவு அமைப்பின் இயக்குனர் (WFP) David Beasley கூறும் பொழுது, உலகளவில் பட்டினிச்சாவுகள் அதிகரிக்கும் எனக் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும் இந் நிலையினை சரி செய்ய 17 டிரில்லியன் டொலர் அளவிற்கு செலவுகள் பல நாடுகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உலக உணவுத்திட்டத்தின் மூலமாக  இதுவரை வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு 138 மில்லியன் மக்களுக்கு உணவு வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை 85 மில்லியன் மக்களுக்கு மட்டுமே இது சாத்தியமாகியுள்ளது.

கையிருப்பில் உள்ள வளங்களைக்கொண்ட மக்களின் பசியினைப் போக்க நடவடிக்கைகள் எடுத்தாலும் பட்டினிச்சாவுகள் உலகளவில் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன.

உலகில் கொரோனாவின் காரணமாக பல நாடுகளின் உணவுக் கையிருப்புக்கள் குறைந்து கொண்டே வரும் வேளையில், மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் செய்வதை எந்த நாடும் நிறுத்தக்கூடாது. கொரோனா மிகவேகமாக பரவி வரும் சூழ்நிலையில், நாடுகளுக்கிடையே வர்த்தகங்கள் குறைந்தாலும் இதில் அதிகமாகப் பாதிக்கப்படப்போவது ஏழை மக்களே.

இந்நிலையில், ஆபிரிக்காவில் வாழ்வா, சாவா என்ற நிலையே மக்களுக்கு உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. லண்டனில் உள்ள ஒரு ஆய்வு பள்ளி, மேற்கொண்ட ஆய்வினில், கொரோனாவினால் ஏற்படும் ஒரு மரணத்தை தடுத்தால் வழக்கமாகத் தரப்படும் தடுப்பூசி, தரப்படாமல் 80 குழந்தைகள் வரை மரணிக்க நேரிடலாம் எனத் தெரியவந்துள்ளது.

காங்கோவில் உள்நாட்டுக் கலவரங்களினால் 15.5 மில்லியன் மக்கள், உணவின்றித் தவித்து வரும் வேளையில், தற்போது இது 22 மில்லியனாக அதிகரித்துள்ளது.

நைஜிரீயாவில், 4.3 மில்லியனில் இருந்து 60லட்சமாகவும் புர்த்தினோ (Burkina) பார்சோவில் (Faso) 3.3 மில்லியன் மக்களும் ஏமனில் 20 மில்லியன் மக்கள் பட்டினியாலும் மேலும் 3 மில்லியன் மக்கள், கொரோனா சூழலால் ஏற்பட்ட வறுமையினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலக நாடுகளின் உதவி பெருமளவு நிறுத்தப்பட்டுள்ளதால் இந்நாட்டு மக்களுக்கான உதவிகளும் குறைவாகவே போய்ச் சேருகின்றன.

அதே சூழல் தொடர்ந்தால் டிசம்பர் மாத அளவில் மேலும் 4.4மில்லியன் மக்களுக்கான உணவு உதவியை நிறுத்த வேண்டியிருக்கும்.

உலகில் 2000 பில்லியனர்கள் கிட்டத்தட்ட 8 டிரில்லியன் டொலர் அளவிற்கு சொத்துக்களை வைத்துள்ளனர். உலக உணவுத் திட்டம், ஒரு வருடத்தில் 30 மில்லியன் மக்களுக்கு உணவு வழங்கி பட்டினிச் சாவில் இருந்து காப்பாற்ற 4.9 பில்லியன் டொலர் மட்டுமே தேவைப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

ஐ.நாவை சார்ந்த மார்க் லோக் (Mark Lowcock)  என்ற அதிகாரி கூறுகையில்,

“கொரோனாவிற்கு முன்னர் உலகில் 135 மில்லியன் மக்கள் உணவின்றி தவித்தனர். ஆனால் இந்த வருடம் இது கிட்டத்தட்ட இரட்டிப்பாகி 270 மில்லியன் மக்களைத் தொடும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

சாகேலில் கலவரம் காரணமாக விவசாயத்தை தொழிலாகக் கொண்ட ஒரு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இது கிட்டத்தட்ட  கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 14மில்லியன் மக்களுக்கு உணவு கிடைப்பதில் பாதிப்பு ஏற்படும். இதனைத் தடுக்க உள் நாட்டுக் கலவரங்களையும் நாடுகளுக்கு இடையேயான பிரச்சனைகளையும் பேச்சுவார்த்தைகளின் மூலம் முடிவுக்கு கொண்டுவரவும் அதிக நிதி உதவிகளைப் பெறும் வழிகளை கையாளவும் வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் இயக்குனர் கி.யு. டோன் யு,( Qu Dongyu) “ ஏற்கனவே பல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளை மிகுந்த வரிய நிலைக்கு கொரோனா தள்ளிவிட்டது.

உலகளவில் நகரங்களில் வசிக்கும் ஏழை மக்கள் தொழிலாளர்கள், நால்நடை வளர்ப்போர், பெண்கள், குழந்தைகள் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்டோரே கடுமையான வறுமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனைத் தடுக்க வேகமான நடவடிக்கைத் தேவை என்றும் மனிதாபிமான உதவிகள் அமைதிக் குழுக்கள் போன்றவையும் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து இந்நிலையில் இருந்து உலக நாடுகளை மீட்க உவிகள் செய்ய வேண்டும்.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில், உலக நாடுகளில் நிகழும் கலவரங்களை  பேச்சுவார்த்தைகள் மூலம் தடுக்க முன் வர வேண்டும். இதன் மூலம் பசி பட்டினியால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் நடவடிக்கைகளை விரைவாக எடுக்க முடியும்  எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here