படை மயமாகும் மற்றுமொரு சிவில் நிர்வாக அலகு

இலங்கையில் குடிசார் நிர்வாகங்கள் விரைவாக படைத்துறைமயப்படுத்தலுக்கு உள்ளாகி வருவதாக உள்ளூர் அரசியல் வாதிகள் மட்டுமன்றி உலக அமைப்புகளும் குற்றம் சாட்டி வரும் நிலையில் மற்றுமொரு சிவில் அலகு படையினர் வசம் செல்கிறது.

அடுத்த வருடம் தொடக்கம் வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை தயாரிக்கும் பணி இலங்கை இராணுவத்திடம் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அனுமதிப்பத்திரத்தை வழங்கும் பணியை இலங்கை இராணுவத்திடம் ஒப்படைப்பது தொடர்பில் நேற்றைய தினம் விசேட பேச்சுவார்த்தை ஒன்று போக்குவரத்து அமைச்சின் கேட்போர் கூடத்தில் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, அமைச்சின் செயலாளார் காமினி செனவிரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.