ட்ரம்ப் இன் நடவடிக்கையால் குடியுரிமையை இரத்துச் செய்யும் மக்கள்

47
12 Views

அமெரிக்காவில் தங்கள் குடியுரிமையை இரத்துச் செய்யும் மக்களின் தொகை இந்த ஆண்டு இரண்டு மடங்காகியுள்ளதாக நியூயோர்க்கை சேர்ந்த மக்கள் கணக்கெடுப்பு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. ட்ரம்ப்பின் அடக்குமுறையும்இ இனவெறிக் கொள்கையுமே இதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாடுகளிலிருந்து தொழில் நிமித்தமும்இ வேறு காரணங்களுக்காகவும் அமெரிக்காவில் குடியேறிய மக்கள் அங்கு குடியுரிமை பெற்று வாழ்கின்றனர். அவர்களில் பலர் தற்போது அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்து விட்டு தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு 2 ,072 பேர் அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்திருந்தனர். இந்த ஆண்டு இந்த தொகை இரண்டு மடங்காகியுள்ளது. தற்போது வரை 5,800 பேர் அமெரிக்கக் குடியுரிமையை இரத்துச் செய்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜேர்மனியில் ஹிட்லரின் ஆட்சியின் போது அங்கு வாழ்ந்த பலர் அவரின் அடக்குமுறை பிடிக்காது ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் குடியேறினர். அவ்வாறே தற்போது அமெரிக்காவிலும் மக்கள் வேறு நாடுகளுக்கு செல்கின்றனர்.

தற்போது நடைபெற்ற ஜோர்ஜ் பிளெயின் படுகொலைச் சம்பவத்தால் கறுப்பின அமெரிக்கர்கள் பலர் அமெரிக்காவை விட்டு வெளியேறி வருகின்றனர்.

ட்ரம்ப்பின் இனவெறி நடவடிக்கைகள் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. அவரின் ஆட்சி தொடரும் இடத்துஇ இவ்வாறு மக்கள் புலம்பெயர்வது அதிகமாகும் எனவும்இ இதுவேதனைக்குரிய விடயம் எனவும் அரசியல் நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளர்.

மேலும் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை எதிர்பார்த்து சிலர் காத்திருக்கின்றனர். தேர்தலில் ட்ரம்ப் வெற்றியடைந்தால் தாங்கள் வெளியேறலாம் என அவர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். அதிபர் தேர்தலில் ஜோ பிடேன் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் தாங்கள் தொடர்ந்தும் அமெரிக்காவிலேயே தங்கலாம் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு.

அத்துடன் கொரோனா அச்சம் காரணமாகவும் சிலர் அமெரிக்காவை விட்டு வெளியேறுகின்றனர். அவ்வாறு தற்காலிகமாக வெளியேறுபவர்கள் ஆண்டு ஒன்றிற்கு 2இ350 அமெரிக்க டொலர்கள் செலுத்துமிடத்து அவர்களின் குடியுரிமை ஆண்டு தோறும் புதுப்பிக்கப்படும் என்பதால் அவ்வாறு சிலர் வெளியேறி வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here