தமிழினப் படுகொலை நீதி கோரலுக்கு ஆதரவாக செயலாற்றுவேன்(குறு நேர்காணல்)-இரா.சாணக்கியன்

இராசமாணிக்கம் இராஜபுத்திரன் சாணக்கியன்,தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் ,மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 33,332 வாக்குகள் பெற்று ,நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ளார்.

இவரிடம் அவரது எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக இலக்கு மேற்கொண்ட குறிகிய நேர்காணல்

1.தாங்கள் முன்னுரிமை கொடுக்கவுள்ள செயற்த்திட்டங்கள் கூறமுடியுமா?

நாங்கள் உரிமைக்கான போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்கும் அதேவேளை அரசாங்கத்தினை நம்பியிராமல்  மட்டக்களப்பு மாவட்டம் சார்ந்த சில வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்கவேண்டிய தேவையிருக்கின்றது.

மாவட்டம் சார்ந்த தேவைப்பாடுகளை நாங்கள் நேரடியாக சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டுசென்று அவற்றினை தீர்க்கதேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளேன்.

அதேபோன்று மட்டக்களப்பு மாவட்ட சார்ந்த வளங்களை பயன்படுத்தி தேவையான முதலீகளை எமது புலம்பெயர் உறவுகளை ஒருங்கிணைத்து செய்யலாம் என்ற வகையிலான செயற்றிட்டங்களை முன்னெடுத்துள்ளேன்.

2.இந்த தேர்தலில் மக்களின் தீரப்பை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

இது தொடர்பில் நாங்கள் நிறைய ஆராயவேண்டியுள்ளது.இந்த பின்னடைவு தொடர்பில் ஆராய்ந்த பின்னரே என்னால் கருத்து கூறமுடியும்.

3.உங்கள் வெற்றிக்கு அப்பால் உங்கள் கட்சியின் அடைவு பற்றி தங்கள் கருத்து என்ன?

பின்னடைவினை சந்தித்துள்ளது.அது தொடர்பில் மேலதிக கருத்துகளை என்னால் கூறமுடியாது எனினும் இது தொடர்பில் கட்சி கூடி ஆராய்ந்த பின்னர் கருத்துகளை தெரிவிக்கமுடியும்.

  1. தங்களுக்கு கிடைத்த இந்த வாய்ப்பை தமிழரின் இருப்பை உறுதிசெய்ய,அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் தேட எவ்வாறு பயன்படுத்தலாம் என நினைக்கிறீர்கள்?

நான் மேலே கூறியவாறு எமது வளத்தினை நாங்கள் பயன்படுத்தும் ஒரு பொறிமுறையினை உருவாக்கி நாங்கள் செயற்றிட்டங்களை முன்னெடுக்கமுடியும்.தமிழ் மக்களின் இருப்பு எதிராக முன்னெடுக்கும் செயற்பாடுகளை தடுத்து நிறுத்த தொடர்ந்து போராடுவோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக பல காலமாக தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றது.சர்வதேச ரீதியில் தமிழினப் படுகொலை தொடர்பிலான நீதி கோரலுக்கு ஆதரவாக நான் தொடர்ந்து செயற்படவுள்ளேன்.