Guyana நாட்டு ஜனாதிபதி Donald Ramotar தொடக்கி வைக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு

மத்திய அமெரிக்காவின்  Guyana நாட்டின் ஜனாதிபதி Donald Ramotar , போர்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர்  Stephen J. Rapp  உட்பட பல முக்கிய பிரமுகர்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வின் தொடக்க நிகழ்வில் பங்கெடுக்கின்றனர்.

மே22ம் நாள் வெள்ளிக்கிழமை (அமெரிக்கா) நியூ யோர்க் நேரம் காலை 8 மணிக்கு தொடங்க இருக்கின்ற இந்நிகழ்வினை www.tgte.tv வலைக்காட்சி , https://www.facebook.com/tgteofficial சமூகவலைத்தளம் உட்பட தமிழர் ஊடகப்பரப்பெங்கும் உலகத்தமிழர்கள் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே18ம் நாள் இடம்பெற்றிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையினை கிழக்கு தீமோரின் முன்னாள் ஜனாதிபதி  Dr. Jose Ramos-Horta  அவர்கள் வழங்கியிருந்த நிலையில், தற்போது இந்நிகழ்வில் Guyana  நாட்டு ஜனாதிபதி Hon Donald Ramotar பங்கெடுத்திருப்பது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முக்கியமானதொரு நகர்வாக உள்ளதோடு, அமெரிக்காவின் ஓபமா நிர்வாகத்தில் போர்குற்ற விவகாரங்களுக்கா தூதுவராக ( United States Ambassador-at-Large for War Crimes Issues  ) இருந்த  Stephen J. Rapp  அவர்கள் பங்கெடுப்பதும் முக்கியமானதொரு விடயமாகவுள்ளது.

இத்தொடக்க நிகழ்வில் அமெரிக்காவின் கொலம்பிய பல்கலைக்கழக (  Director,Peace-building and Rights Program    Institute for the study of Human Rights- Columbia University,U.S.) Aதலைவர்  Professor David.L .Phillips   அவர்கள் பங்கெடுப்பதோடு, தமிழகத்தில் இருந்தும் பேராளர்கள் பங்கெடுக்கின்றனர்.

தொடர்ந்து மதியம் 13 மணிக்கு தொடங்க இருக்கின்ற அரசவை அமர்வில் நாடுகடந்த அரசியல், அதன் கோட்பாட்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கடந்த பத்து ஆண்டுகளில் அது கடந்து வந்த பாதை, அதன் எதிர்காலம் என்ற தொனிபொருளில் கருத்தாடல் ஒன்று இடம்பெற இருக்கின்றது.

இதேவேளை புதிதாக நியமனம் பெற்றுள்ள நா.தமிழீழ அரசாங்கத்தின் மேலவை உறுப்பினர்களுக்கும் Dr. Jeyalingam (Physician and Former President Illankai Tamil Sangam, USA), Prof. Saraswathy – (Human Rights Activist, Tamil Nadu,India), Mrs. Usha Sriskandarajah (Yoga Teacher, Poet, Writer and Columnist, Canada), Mr. Satya (Journalist, Human Rights and Public Health Activist based in New Delhi, India), Mr. Rathakrishanan (Political Analyst, Legal Expert, Human Rights Activist, Writer and Columnist, Tamil Nadu, India), Mr. Ravikumar (President of World Thamil Organaization (WTO), USA), Mr. Roy Chetty (Human Rights Activist, South Africa) அரசவை உறுப்பினர்களுக்கு இடையிலான கருத்தாடல் ஒன்றும் இடம்பெற இருக்கின்றது.

தொடர்ந்து அமைச்சர்களினால் சமர்பிக்கப்பட இருக்கின்ற செயற்பாட்டு அறிக்கை தொடர்பிலான விவாதமும் இடம்பெற இருக்கின்றது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக நேரடி அரசவை அமர்வினை நடத்த முடியாத நிலையில், இணையவழி தொழில்நுட்பம் மூலம், இந்நிகழ்வுகள் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போரே வாழ்வாகவும் வாழ்வே போராகவும் கொண்ட எமது விடுதலைப் பாதையில் கொரோனா வைரஸ் போன்ற எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டவாறு ;கான நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரவித்துள்ளது.