சுற்றுச்சூழல் ஊடகவியலாளர்கள் 10 பேர் படுகொலை

கடந்த ஐந்து ஆண்டுகளில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு தொடர்பில் கவனம்செலுத்திவந்த 10 ஊடகவியலாளர்கள் உலகம் எங்கும் கொல்லப்பட்டுள்ளதாக உலக சுற்றுச் சூழல் தினத்தை (22) முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

50 மேற்பட்ட வன்முறைகள் ஊடகவியலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிலிப்பைன்ஸ் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் அங்குள்ள தீவுக்கூட்டங்களில் ஏற்படும் சூழல் பாதிப்புக்கள் தொடர்பில் தகவல்களை வெளியிட்ட அமெரிக்க ஊடகவியலாளர் கொலை முயற்சியில் இருந்து கடந்த வருடம் தப்பியுள்ளார்.

கடந்த 10 வருடங்களில் 20 சூழலியல் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வன்முறைகளில் 66 விகிதமானவை ஆசிய மற்றும் அமெரிக்க நாடுகளில் இடம்பெற்றுள்ளன.

மணல் அகழ்வு, காடுகள் அழிப்பு, கனிமப்பொருட்கள் அகழ்வு தொடர்பில் தகவல்களை வெளியிடும் ஊடகவியலாளர்கள் அதிகம் தாக்கப்படுவதாக இந்திய ஊடகவியலாளர் சந்தியா ரவிசங்கர் தெரிவித்துள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.