Tamil News
Home உலகச் செய்திகள் நிரந்தர குடியேற்றம்: ஆஸ்திரேலியா போட்ட கணக்கை வீழ்த்திய கொரோனா

நிரந்தர குடியேற்றம்: ஆஸ்திரேலியா போட்ட கணக்கை வீழ்த்திய கொரோனா

2019-20 நிதியாண்டில் ஆஸ்திரேலியாவுக்குள் 160,000 நிரந்தரமாக அனுமதிப்பது என்ற எல்லையை ஆஸ்திரேலிய அரசு வைத்திருந்த நிலையில், அதைவிட குறைவான அதாவது 140,366 பேர் மட்டுமே ஆஸ்திரேலியாவுக்குள் நிரந்தர குடியேறிகளாக சென்றிருக்கின்றனர்.
கடைசியாக, 2004- 05ம் நிதியாண்டிலேயே 120,060 எனும் குறைவான எண்ணிக்கை பதிவாகியுள்ளது. தற்போதைய வீழ்ச்சிக்கு காரணம், கொரோனாவால் ஏற்பட்ட சர்வதேச பயணம் முடக்கமே எனக் கூறப்படுகின்றது.
அதே சமயம், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்குள் நிரந்தரமாக வசிப்பதற்கான விசா பெற்று சென்ற இந்தியர்களின் எண்ணிக்கை 25,698 ஆகும். அந்த வகையில், ஆஸ்திரேலியாவை நிரந்தர குடியேற்றத்தில் இந்தியா தொடர்ந்து முதன்மையான இடத்தில் உள்ளது.
Exit mobile version