கொரோனாவிற்கு மூலிகை மருந்தை விற்கும் ஆபிரிக்கா- WHO எச்சரிக்கை

உலக சுகாதார நிறுவனம் (WHO ), ஆபிரிக்காவில் பயன்பாட்டில் இருக்கும் கொரோனா தடுப்பு மருந்துகளில் தரம் மற்றும் அதன் தன்மையை அறிய சில வரையறைகளை அறிவித்துள்ளது.

பழைய மருத்துவ முறைகளைத்  தற்போது உள்ள நோய்களுக்குப்  பயன்படுத்த சில வரையறைகளை அறிவியல் ரீதியாக மேற்கொள்வது அவசியமாகிறது. அவ்வாறு வரையறைக்கு  உட்பட்டு  உள்ள மருந்துகளை அதிகளவில் தயாரிக்கவோ அல்லது நோயைத் தடுக்காத மருந்துகளின் தயாரிப்பை நிறுத்தவும் முடியும்.

ஆய்வுக்கு உட்படுத்தாத மருந்துகளை எடுத்துக்கொள்ளும் போது, பின்விளைவுகள் ஏற்படலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ள நிலையில், மடகாஸ்கரின் (Madagascar ) பிரதமர் இவ்வாறு ஆய்வுக்கு உட்படுத்தாத ஒரு மருந்தினைக் கொரோனாவினைக் குணப்படுத்தும் என கூறி விற்பனையை அதிகப்படுத்தியுள்ளார்.

இந்த புதிய வரையறைகள், ஆபிரிக்க மருந்து ஆராட்சியாளர்கள் தக்க மருந்தினை ஆய்வுகளுக்கு உட்படுத்திய பிறகே, நோயாளிகளிகளுக்கு அளித்து பரிசோதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே கொண்டு வரப்பட்டது. அதே நேரம் ஆபிரிக்காவின் பழமையான மருந்துகள் கொரோனாவிற்கு எதிரான மூன்றாம் நிலை ஆய்விற்கு உட்படுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த ஓர் வல்லுனர் குழுவும் ஆபிரிக்க நோய்த் தடுப்பு மற்றும் ஆய்வு அமைப்பினைச் சேர்ந்தவர்களும் இந்த சட்ட திட்டங்களுக்கு ஒத்துக்கொண்டுள்ளனர்.

மூன்றாம் நிலையிலான ஆய்வுகள், மருந்தின் வீரியம் மற்றும் நோய் தடுக்கும் தன்மையை அதிகளவு மக்களிடம் செலுத்தி ஆய்வு செய்யும். இந்த வரையறைகளைக் கடைப்பிடித்து ஆய்வுக்கு உட்படுத்தப்படும் மருந்துகள்  கொரோனா தடுப்பில் மக்களின் உயிருக்கு சேதம் இன்றி பாதுகாப்பாக செயல்பட்டால் மக்களின் பயன்பாட்டுக்கு மருந்துகள் வரும் என குழுவின் தலைவர் Motlalepula Gilbert Matsabisa  தெரிவித்துள்ளார்.

எபோலா நோய் மேற்கு ஆபிரிக்காவில் உண்டானது போல, கொரோனா பரவலும் மருத்துவத்துறையில் அதிகளவு ஆய்வுகள் செய்ய வேண்டிய அவசியத்தையும் புதிய நோய்த் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிப்பதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றனர் என உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவர் Tumusiime  தெரிவித்துள்ளார்.

மடகாஸ்கர் அதிபரினால் அறிமுகம் செய்யப்பட்ட மூலிகை மருந்து மலகாசி  (Malagasy )ஆய்வு நிறுவனத்தினரால் ஆர்தி மீசியா (Artemisia)  என்னும் தாவரத்தில் இருந்து உருவாக்கப்பட்டது. இத்தாவரம் மலேரியா காய்ச்சலின் சிகிச்சைக்காகப் பயன்படுகின்றது.

இந்நிலையில், மருத்துவர் Tumusiime மேலும் கூறுகையில், கொரோனா தடுப்பு மருந்துகளின் திறன், பரிசோதனை மற்றும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு முடிவுகள் அறுபது நாட்களுக்குள் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.