அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் பதவியேற்பு

புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்கும் நிகழ்வு கண்டி, மகுல்மடுவவில் தற்போது நடை பெற்று வருகின்றது.

நிகழ்வின் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர்களுக்கான நியமனங்கள் முதலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கி வைக்கப்பட்டன.

முன்னராக 40 இராஜாங்க அமைச்சர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

தற்போது, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

01. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ – நிதி, புத்த சாசனம், சமய அலுவல்கள் மற்றும் கலாசாரம்.

02. நிமல் சிறிபால டி சில்வா – தொழில்.

03. ஜீ.எல்.பீரிஸ் – கல்வி.

04. பவித்ரா வன்னியாராச்சி – சுகாதாரம்

05. தினேஸ் குணவர்தன – வௌிநாட்டு.

06. டக்ளஸ் தேவானந்தா – கடற்றொழில்

07. காமினி லொக்குகே – போக்குவர்த்து.

08. பந்துல குணவர்தன – வர்த்தகம்.

09. ஆர். எம். சீ. பீ. ரத்னாயக்க – வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு

10. ஜனக பண்டார தென்னகோன் – அரச சேவைகள் மாகாண சேவைகள் மற்றும் உள்ளூராட்சி

11. கெஹெலிய ரம்புக்வெல்ல – வெகுசன ஊடகத் துறை

12. சமல் ராஜபக்ஷ – நீர்பாசனத் துறை

13. டலஸ் அழகப்பெரும – மின் சக்தித் துறை

14. ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ – நெடுஞ்சாலைகள்

15. விமல் வீரவன்ச – கைத்தொழில்

16. மஹிந்த அமரவீர – சுற்றாடல்

17. எஸ். எம். சந்திரசேன – காணி

18. மஹிந்தானந்த அலுத்கமகே – கமத்தொழில்

19. வாசுதேவ நாணயக்கார – நீர் வழங்கல்