சர்வதேச போற்க்குற்றங்களை விசாரிக்க ஐ.நாவிற்கு அழுத்தம் கொடுக்குமா கனடா?

சர்வதேச போற்க்குற்றங்களை விசாரிக்க, சட்ட திருத்தங்களை மேற்கொள்ள உதவுமாறு புலம்பெயர் தமிழர்கள் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவைச் சந்தித்துக் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

சிறீலங்காவில் 1983 முதல் 2009 வரை நடைபெற்ற உள் நாட்டுப் போரின் காரணமாக, குறைந்தபட்சம் 60,000ம் மேற்பட்ட மக்கள் காணாமல் போயிருப்பதாகச் சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. அவர்களின் நிலை பற்றி இன்று வரையில் எந்த தகவலும் இல்லை.

இந்நிலையில், கனடாவாழ் தமிழர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

வெளிநாட்டு நீதி மன்றங்களில் நடத்தப்படும் வழக்குகளின் தீர்ப்புக்கள், நாடுகளின் இறைமையைக் கருத்தில் கொண்டு மற்ற நாடுகளின் வணிக ரீதியான செயற்பாடுகளுக்கு விலக்களிக்கப்படும் முறைமை நடைமுறையில் உள்ளது. எனினும் அதீத குறைபாடுகள் காணப்படும் போது, இவ்வகை விலக்களிப்பு நிறுத்தப்பட்டு வர்த்தகத் தொடர்புகள் துண்டிக்கப் படுவதுண்டு.

அவ்வாறே சர்வதேசக் குற்றவியல் குற்றங்களுக்கும் ஏன் தண்டனை அளிக்க கூடாதென கேள்விஎழுப்பியுள்ளனர். இந்த சட்ட ஒழுங்கு முறைகள் தமிழர்களுக்கு மட்டுமன்றி, உலகில் மற்ற நாடுகளில் போர்க்காலங்களில் காணாமல் போணவர்களுக்கும் தீர்வழிக்கக் கூடியதாக இருக்கும். ஐநாவின் ஆறிக்கையின் படி, சுமார் 85 நாடுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள், காணாமல் போனதாகத் தெரிய வருகின்றது.

கனடாவில் 4 பேர் கொண்ட தமிழ் குழு ஒன்று, பிராம்ப்டனில் ( Brampton) இருந்து (Ottawa) ஒட்டாவாவில் உள்ள  பார்லிமன் ஹில்( Parliament Hill) வரை, 16 நாட்கள் நீதிக்கான நடைபயணத்தை மேற்கொண்டனர். சிறீலங்காவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை உலகறியச் செய்வதற்காகவே இந்த நடை பயணம் மேற்கொள்ளப்பட்டது. மற்றொரு குழு மாண்ட்ரீயாலில் இருந்து (Montreal) இருந்து  ஒட்டோவா  வரை நடைபயணம் மேற்கொண்டது.

இந்தக் குழுவினரின் நோக்கம், சிறீலங்காவின் மீது ஐநா சபையில் கனடா புகார் கொடுக்க வேண்டும் என்பதே ஆகும். 2016ல் ஐநாவின் சாசனத்தை சிறீலங்கா ஏற்றுக்கொண்டாலும் அந்த நாட்டைச் சேர்ந்த மக்கள், காணாமல் போனவர்களைப் பற்றிய புகார்களை நேரிடையாக பதிவு செய்வதிலிருந்து விலக்களிக்கிறது.

இந்நிலையில் ஐநாவில் போர்க்குற்றத் தீர்மானத்தில் கையெழுத்திட்ட பிற நாடுகள் மட்டுமே அவ்வகை முறைப்பாட்டைக் கொடுக்க முடியும் என்பதும் ஒர் ஒழுங்கமைப்பாகும். எனவே கையெழுத்திட்ட பிற நாடுகள் மட்டுமே சிறீலங்கா மீது ஐ.நாவில் புகார் கொடுக்க முடியும்.

கனடா இந்த தீர்மானத்தில் ஒப்பமிடாமையால் இலங்கையின் மீது வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் புகார் கொடுக்கக் கூடிய உரிமை இல்லாத நாடாகிறது.

எனவே கனேடிய அரசாங்கம் குற்றவியல் விலக்களிப்பை நிறுத்தி இலங்கைக்கெதிராக கண்டனத்தையும், ஐ.நா ஊடான அழுத்தத்தையும் ஏனைய நாடுகளுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும் எனும் கோரிக்கையை மனித உரிமை ஆர்வலர்கள் வைத்துள்ளனர்.