யாழ்ப்பாணத்தில் ”அவளுக்கு ஒரு வாக்கு”

அவளுக்கு ஒரு வாக்கு எனும் தொனிப் பொருளில் பெண் வேட்பாளர்களுக்கான வாக்கு சேகரிக்கும் பிரச்சாரப் பணி யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது.

வடமாகாணத்தைச் சேர்ந்த பொது அமைப்புக்களில் அங்கம் வகிக்கும் பெண்களின் கூட்டினைவில் இடம்ப்பெறுகிறது. குறித்த பிரச்சார பணி குறித்து செயற்பாட்டாளர்களான எஸ். தீபா, ஜ.நாகரஞ்சினி,எஸ்.சஹானா மற்றும் லயன் ஆனந்தி ஆகியோர் குறிப்பிடுகையில் பெண்கள் அரசியலில் ஈடுபடல் வேண்டும். எமது உரிமை குறித்து பெண்களால் தான் பேச முடியும். எந்தக் கட்சி என்று நாம் குறிப்பிடவில்லை.

கட்சிகளுக்கு அப்பால் ஆளுமையான கெட்டித்தனமுடைய பெண்களை நாம் தான் தெரிவு செய்ய வேண்டும். அந்த வகையில் மூன்று விருப்பு வாக்குகளில் ஒரு வாக்கை மட்டும் பெண்களுக்கு வழங்குவதனூடாக பெண்பிரதிநிதித்துவத்தை அங்கீகரிக்கச் செய்வோம். இதனைத்தான் நாம் அனைத்து பெண்களிடமும் கோரி நிற்கின்றோம். எனத் தெரிவித்தனர்.

வீடுகள் தோறும் செல்லும் இவர்கள் பெண் பிரதிநிதித்துவத்தின் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

இச் செயற்பாடுகள் கொக்குவில். யாழ்ய்பாணம் நாவாந்துறை ஆகிய இடங்களில் இடம்பெற்றுள்ளதுடன் மன்னார். வன்னி . முல்லை ஆகியமாவட்டங்ளில் இது குறித்து தெருவெளி நாடகங்ளை மகாலட்சுமி குருசாந்தன் தலைமையிலான மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் செயல்மமுனைப்புடன் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.