225 ஆசனங்களுக்கு 7,452 பேர் போட்டி ;1கோடியே 62 இலட்சம் வாக்காளர்

ஓகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் 225 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிலிருந்து 03 ஆயிரத்து 682 பேரும், சுயேச்சைக் குழுக்களின் சார்பில் 03 ஆயிரத்து 800 பேருமாக மொத்தம் 07 ஆயிரத்து 452 பேர் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 874 பேர் வாக்களிப்பதற்கு தகுதிப்பெற்றுள்ளனர். பொதுத் தேர்தலுக்கான 12 ஆயிரத்து 985 வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன் நாடு முழுவதும் 71 வாக்கெண்ணும் மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 05 மாதங்களின் பின்னர் பொதுத் தேர்தல் நடைபெறுவது இலங்கை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தருணமாக மாறியுள்ளன.