450 நாட்களாக போராடி தமது பூர்வீக நிலங்களை மீட்ட பொத்துவில் மக்கள்

சிறிலங்கா வன ஜீவராசிகள் திணைக்களத்தின் சிறிலங்கா கையகப்படுத்தப்பட்டிருந்தபொத்துவில் கனகர் கிராம தமிழ் மக்களின் காணிகளை மீள கையளிக்கும் வகையில் அவற்றை அளவீடு செய்யும் பணிகள் ஆரம்பி க்கப்பட்டுள்ளன.

இதன்படி நேற்றைய தினம் 225 ஏக்கர் காணி பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜா முன்னிலையில் அளவீட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. அக்கரைப்பற்று – பொத்துவில் ஏ 4 பிரதான வீதியில் 60ஆம் கட்டை ஊறணியில் பகுதியில் உள்ள தமது பூர்வீக காணியை விடுவிக்க கோரி கடந்த 450 நாட்களாக காணி மீட்பு போராட்டத்தில் இம் மக்கள் ஈடுபட்டுவந்தனர்.

இவ்வாறான நிலையிலேயே இவ் அளவீட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் 22 ஏக்கர் காணியை வனபரிபாலன திணைக்களம் அடையாளப்படுத்தியுள்ளது.