4,000 அதிகமானோர் பலி – துன்பமான வாரங்களை எதிர்கொள்ளும் அமெரிக்கா

கொரோனா வைரசின் மையப்புள்ளியாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் நேற்று செவ்வாய்க்கிழமை வரையிலும் 4000 இற்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதுடன், 200,000 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றுடன் (31) முடிவுற்ற 24 மணிநேரத்தில் அங்கு 700 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவின் மாநிலங்களில் நியூயோர்க் மாநிலமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொலாட் டிறம் அமெரிக்க மக்களுக்கு எதிர்வரும் வாரங்கள் மிகவும் துன்பமானவையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் 200,000 மக்கள் மரணமடையலாம் என அமெரிக்க பல்கலைக்கழக ஆய்வு ஒன்று எதிர்வு கூறியுள்ளது.

உலகில் 42,000 மக்கள் இதுவரை உயிரிழந்துள்ளதுடன், 850,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.