2020 இல் நெருக்கமாக பணியாற்ற விருப்பம்: கோட்டா, மஹிந்தவுடன் மோடி பேச்சு

65

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடனும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

2020 புத்தாண்டை முன்னிட்டு, வாழ்த்துக் கூறுவதற்காக, இலங்கைத் தலைவர்கள் மற்றும் பூட்டான், நேபாளம், மாலைதீவு, பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கும் இந்தியப் பிரதமர் நேற்றுமுன்தினம் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டிருந்தார்.

இந்தத் தொலைபேசி உரை யாடலின்போது, இந்தியப் பிரதமர் மோடியும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், 2020 ஆம் ஆண்டில் நட்புறவுகளை மேம்படுத்துவதில் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையுடன் நெருக்கமான மற்றும் விரிவான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.