2020ஆண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2020ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு விபரங்கள் இன்று முதல் அறிவிக்கப்படுகின்றது. இதற்கமைவாக  மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு 3பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றது.

அதன்படி ஹார்வே ஜே.ஆல்டர், மைக்கேல் ஹாப்டன் மற்றும் சார்லஸ் எம்.ரைஸ் ஆகிய 3பேருக்கும் இந்த விருது பகிர்ந்தளிக்கப்படுகின்றது.

இவர்கள் மூவரும் இணைந்து ‘ஹெப்பரைற்றிஸ் சி வைரஸ்’ என்ற வைரசை கண்டறிந்தமைக்காக இவர்களுக்கு 2020இற்கான மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு வழங்கப்படுகின்றது.

ஹெப்பரைரிஸ் C ஈரலளர்சியை ஏற்படுத்தும் மூன்றாவது வகை வைரசு 1989 இல் ஹார்வியால் இனங்காணப்பட்ட போதும் மைக்கெல் ஹோட்டன் 1990 இல் அதன் உயிரியல் இரசாயன கூறுகளை இனங்கண்டு பரிசோதனை முறைகளை இனங்கண்டார், அதனை தொடர்ந்து சார்ள்ஸ் ரைஸ் ஹெப்பரைரிஸ் C வைரசு தனியாக ஈரல் அழற்சியை ஏற்படுத்த வல்லது என்பதை 1991 இல் உறுதிப் படுத்தினார்.

இக்கண்டுபிடிப்புகள் தொடர்ந்து ஹெப்பரைரிஸ் C வைரஸினால் ஏற்பட கூடிய தாக்கங்களை குறைக்கும் மருந்துகளையும் அந்நோயின் பரவளையும் தடுக்க உதவியமையை கருத்தில் கொண்டு 2020 இற்கான நோபல் பரிசு கிட்டத்தட்ட 20 ஆண்டுகளின் பின்னர் இவர்களுக்கு வழங்கப்படுவது குறிப்பிடதக்கது.

உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு, மருத்துவம், இயற்பியல், வேதியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் அமைதிக்கான நோபல் பரிசு நோர்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு சுவீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படும்.

இதற்கமைவாக இந்த ஆண்டிற்கான துறை சார்பாக நோபல் பரிசுகள் இன்று (05) முதல் அறிவிக்கப்படுகின்றது. அதன்படி மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றைய துறைகளுக்கான நோபல் பரிசு விபரங்கள் அடுத்தடுத்த தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.