‘அப்போது பாதுகாப்பு அதிகாரங்கள் என்னிடம் இல்லை’- ருவான்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை ஆணைக்குழுவில்  சாட்சியமளித்த பின் கருத்து தெரிவித்த முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன, “நல்லாட்சி அரசாங்கத்தில் பாதுகாப்பு தொடர்பான அனைத்து அதிகாரங்களும் ஜனாதிபதியிடமே காணப்பட்டது”  என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், “முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் நான் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சராக பணியாற்றிய போதிலும் முழு அதிகாரமும் ஜனாதிபதியிடமே காணப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு பொலிஸ் முப்படையினர் புலனாய்வு பிரிவினர் தொடர்பான அதிகாரங்கள் தன்னிடம் இருக்கவில்லை என்று கூறிய அவர், இதன்காரணமாக நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் நானே இரண்டாவது நிலையிலிருந்தேன் என என்னால் தெரிவிக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2019 ஏப்ரல் 21 ம் நாள்   சிறீலங்கா தலைநகர் உட்பட மூன்று நகரங்களில் இடம்பெற்றன. மூன்று கிறித்தவக் கோவில்களிலும், மூன்று ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளிலும் தொடர் குண்டுவெடிப்புகள்  நடத்தப்பட்டன இதில்  39 வெளிநாட்டவர்கள்  உட்பட 257 பேர் உயிரிழந்திருந்ததுடன், 500ற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.

மேலும் குறித்த சம்பவத்தில் 61 சிறார்கள் காயமடைந்துள்ளனர். 19 சிறார்கள் தாயை இழந்துள்ளதுடன், 4 சிறார்கள் தந்தையை இழந்துள்ளனர். அத்துடன், தந்தை மற்றும் தாயை 3 சிறார்கள் இழந்தனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.