10 தொன் மருந்துகளை இந்தியா இலங்கைக்கு வழங்கியது

தற்போது நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை எதிர்கொள்வதற்காக இந்தியா 10 தொன் உயிர் காக்கும் மருந்துகளை இலங்கைக்கு இலவசமாக அனுப்பி வைத்துள்ளது.

இந்த மருந்துகளை இலங்கை அரசு கேட்டுக் கொண்டதற்கமையவே எயார் இந்தியா சிறப்பு விமானத்தின் மூலம் இவற்றை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்தியத் தூதரகம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையுடன் மழையிலும் வெயிலிலும் இணைந்து நிற்கும் இந்தியா. இந்தியாவின் உறுதிப்பாட்டின் மற்றொரு வெளிப்பாடு இது.

சொந்த உள்நாட்டு சவால்கள் மற்றும் தடைகள் இருந்த போதிலும் இந்தியா தனது வளங்களையும், நிபுணத்துவத்தையும் தனது நண்பர்கள் மற்றும் கூட்டாளர்களுடன் பகிர்ந்து கொள்வதில் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளது என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி அனுப்பப்பட்ட மருந்துகள் நேற்று மாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தன.

இந்த நெருக்கடி மிக்க சூழலில் இலங்கை மக்களைக் காப்பாற்றுவதற்காக மருந்துகளை இலவசமாக கொடுத்து உதவிய இந்தியப் பிரதமர் மோடிக்கும் இந்திய மக்களுக்கும் கோத்தபயா ராஜபக்ஸ நன்றி தெரிவித்து தனது ருவிற்றர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.india gifts 10 ton consignment of medicines to sri lanka 2 1586334332 10 தொன் மருந்துகளை இந்தியா இலங்கைக்கு வழங்கியது