ஹொங்கொங்கில் சர்ச்சைக்குரிய சட்டமூலம் மீள பெறப்பட்டுள்ளது

கடந்த 05 மாதங்களுக்கும் அதிக காலமாக மத்திய ஹொங்கொங்கின் பிரதான செயற்பாட்டு அதிகாரி கெரி லெம் (Carrie Lam) சர்ச்சைக்குரிய நாடு கடத்தல் சட்டமூலத்தை மீளப் பெற்றுள்ளார்.

இது தொடர்பில் தொலைக்காட்சியில் விளக்கமளித்த கெரி லெம் (Carrie Lam), பொதுமக்களின் கருத்துக்கு மதிப்பளித்து இந்த சட்டமூலத்தை அரசாங்கம் நீக்கிக்கொள்வதாக தெரிவித்தார்.

ஹொங்கொங்கில் குற்றச்செயல்கள் புரிந்தவர்களுக்கு எதிரான விசாரணைகளுக்காக சந்தேக நபர்கள், சீனாவுக்கு நாடு கடத்தப்படுவதை அனுமதிக்கும் சட்டத்தை கெரி லெம்மின் அரசு முன்மொழிந்ததையடுத்து ஹொங்கொங்கில் கடந்த ஜுன் மாதம் முதல் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன