ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்துக்குள் பிரவேசிக்க சந்திரிகாவுக்கு தடை

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்துக்குள் பிரவேசிப்பதற்கு அக்கட்சியின் முன்னாள் தலைவர்களுள் ஒருவரான சந்திரிகா குமாரதுங்கவுக்குத் தடைவிதிக்கப்பட்டிருக்கின்றது.

கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக சந்திரிகா சென்ற போது அங்கு உருவாகிய குழப்ப நிலையைத் தொடர்ந்தே இந்தத் தடைவிதிக்கப்பட்டிருக்கின்றது.

கட்சியின் அமைப்பாளர்களின் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே சந்திரிகா அங்கு சென்றிருந்தார். சந்திரிகா கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என அமைப்பாளர்கள் பலர் கோஷமிட்டதையடுத்து அவர் அங்கிருந்து வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

இச்சம்பவத்தையடுத்து, எதிர்காலத்தில் கட்சிக் கூட்ட்ங்களுக்கு சந்திரிகா அழைக்கப்பட்டால், தாம் கட்சி சார்ந்த அரசியல் செயற்பாடுகள் அனைத்தையும் பகிஷ்கரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என கட்சி அமைப்பாளர்கள் கட்சிச் செயலாளருக்கு கடுமையாக எச்சரித்ததாகத் தெரிகின்றது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்துக்குள் பிரவேசிக்க சந்திரிகாவுக்கு தடைஇதனையடுத்தே கட்சித் தலைமையகத்துக்கு வருவதற்கு சந்திரிகாவுக்கு தடை விதிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது. தன்னுடைய தந்தையால் உருவாக்கப்பட்ட கட்சியின் தலைமையகத்துக்குள் பிரவேசிப்பதற்கே சந்திரிகாவுக்கு தடைவிதிக்கப்பட்டிருக்கின்றது.