வேட்பு மனு தாக்குதலின் போது மொட்டுக்கட்சியினருக்கு இடையிலே கருத்து முறன்பாடு!

வவுனியாவில் வேட்பு மனு தாக்குதலின் போது மொட்டுக்கட்சியினருக்கு இடையிலே வாய்த்தர்க்கம் இடம்பெற்றுள்ளது. வவுனியா மாவட்ட செயலகத்தில் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக பொது ஜன பெரமுனவினர் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்திருந்தனர்.

இதன் போது வவுனியா மாவட்ட செயலகத்தினுள் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக மூவரை மட்டுமே அனுமதிக்க முடியும் என பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக ஒருங்கிணைப்புக்குழு தலைவரும் பொது ஜன பெரமுனவின் அமைப்பாளருமான தர்மபால செனவிரத்தினவை வெளியில் நிற்குமாறு கூறி பொது ஜன பெரமுனவின் முதன்மை வேட்பாளர் கே.கே.மஸ்தான், கட்சியின் மற்றுமொரு வேட்பாளரான கேணல் ரட்ன பிரிய, சட்டத்தரணி மூவரும் வேட்பு மனுவினை தாக்கல் செய்வதற்காக வவுனியா மாவட்ட செயலகத்திற்குள் சென்றிருந்தனர்.

சற்று நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்யும் பகுதிக்கு வருகை தந்த தர்மபால செனவிரத்தின மஸ்தான் தொடர்பில் ஊடகவியலாளர்கள் மற்றும் அங்கிருந்தவர்களுக்கு கருத்து தெரிவித்துக்கொண்டிருந்தார்.

வேட்பு மனுவினை தாக்கல் செய்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முதன்மை வேட்பாளருமான கே.கே.மஸ்தான் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவ்விடத்திடத்திற்கு வந்திருந்த ஒருங்கிணைப்புக்குழு தலைவரும் பொது ஜன பெரமுனவின் அமைப்பாளருமான தர்மபால செனவிரத்தின மஸ்தானின் கருத்துக்களுக்கு மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

மேலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கே.கே.மஸ்தானுக்கு அருகில் வந்து கருத்து தெரிவிக்க முற்பட்ட போது மஸ்தான் குறித்த இடத்தில் இருந்து வெளியேறி சென்றிருந்தார். அதன் பின்னர் மஸ்தான் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை தர்மபால செனவிரத்தின முன்வைத்ததோடு வேட்பு மனுவில் இருந்து முக்கியமானவர்களை நீக்கி விட்டு தனக்கு ஆதரவானவர்களை வேட்பாளராக மஸ்தான் நியமித்திருந்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.
625.0.560.350.390.830.053.800.670.160.91 1 3 வேட்பு மனு தாக்குதலின் போது மொட்டுக்கட்சியினருக்கு இடையிலே கருத்து முறன்பாடு!