வெளிநாட்டு வாழ் இலங்கை முஸ்லிம் சகோதரர்களிடமும் அரசியல் தலைவர்களிடமும் உதவிக்கரம் நீட்டுகிறது முஸ்லிம் சமூகம்

இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இனவாதிகள் தமது தாக்குதல்களை அட்டூழியங்களை மேற்கொண்டு வருகின்றனர் ஆனால் அரசாங்கமும் பாதுகாப்பு படையினர் கட்டளைகளை அமுல்படுத்தியும் அவற்றைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

குறிப்பாக இன்று அவசரகால சட்டம் ,விசேட ஊரடக சட்டம் அனைத்தும் அமுல்படுத்தப் பட்டு இன்று வடமேல் மாகாணத்தில் குருநாகல், ஏனைய பகுதிகளில் இலங்கையில் இடம்பெற்ற நேற்றைய வன்முறைகளில் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளனர்.

புத்தளம் மாவட்டம், நாத்தாண்டிய, கொட்டாரமுல்லை பகுதியை சேர்ந்த அமீர் என்பவரும், கம்பஹா மாவட்டம் மினுவாங்கொடை பகுதியை சேர்ந்த பௌசுல் ஹமீத் என்பவருமே இவ்வாறு உயிரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏனைய பிரதேசங்கள் பாதுகாப்பு படை வீரர்கள் பார்த்துக் கொண்டிருக்கவே முஸ்லிம்களின் கடைகளும் பள்ளிவாசல்களும் உடைக்கப்பட்டு எரிக்கப்பட்டு கொள்ளையடிக்கப்படுகிறது ஆனால் பாதுகாப்பு படை வீரர்கள் கண்டும் காணாது போன்றும் இனவாதிகளை கட்டுப்படுத்த முடியாத ஒரு சூழ்நிலையில் காணப்படுகின்றனர்

இது இலங்கையில் நடக்கின்ற முதல் தடவை சிங்கள அடிப்படைவாத இனவாதிகளின் தாக்குதல் அல்ல இதற்கு முதல் அளுத்கம, திகன, அம்பாறை, தாக்குதல்கள் கடந்த வருடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்டது ஒவ்வொரு புனித ரமலான் நோன்பு காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதிகள் தாக்குதல் நடத்துவது வரலாறாக காணப்படுகின்றது.

ஆகவே தயவு செய்து இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டுமாயின் சர்வதேச சமூகத்தில் கண்டிப்பாக கட்டளைகள் இலங்கை அரசாங்கத்திற்கும் இராணுவ படைக்கும் வழங்கப் படுகின்ற போது தான் இவற்றை கட்டுப்படுத்த முடியும் இல்லாவிட்டால் மீண்டும் ஒரு முஸ்லிம்களுக்கு எதிரான யூலைக் கலவரமாக இது மாறக்கூடிய வாய்ப்புகள் அதிகம் காணப்படுகிறது.

அவசியமாக நீங்கள் செய்ய வேண்டிய உதவிகள்:

வெளிநாட்டில் வாழ்கின்ற எமது சகோதரர்கள் அந்தந்த நாட்டு வெளிநாட்டு தூதர் ஆலயங்களுக்கு சென்று இலங்கை முஸ்லிம் மக்களின் நிலைமை தொடர்பான தெளிவான ஆவணம் ஒன்றை சமர்ப்பித்து உதவி கோரல்

✓•குறிப்பாக முஸ்லிம் நாடுகளில் வாழுகின்ற எமது சகோதரர்கள் அந்த முஸ்லீம் நாட்டு தூதுவர்வர்களிடம் சென்று இலங்கைவாழ் முஸ்லிம்களுக்காக உணவு வைத்திய சேவைகள் தேவைப்படுவதால் நீங்கள் உடனடியாக தலையிட்டு இந்த உதவிகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுவது.

✓•ஐரோப்பிய நாடுகளில் காணப்படுகின்ற எமது சகோதரர்கள் அங்கு காணப்படும் ஐக்கிய நாடுகள் சபை காரியாலயம் , மனித உரிமை நிலையம் போன்றவற்றில் முஸ்லிம்கள் மீது அடாத்தாக நடத்தப்படுகின்ற தாக்குதல்களையும் வன்முறைகள் தொடர்பான கோரிக்கையை முன்வைத்து பாதுகாப்பு உதவிகளையும் கேட்பது.

✓•வெளிநாட்டு ஊடகங்களுக்கு இலங்கை முஸ்லிம்களுக்கு இனவாதிகளால் நடத்தப்படுகின்ற அநீதிகள் தொடர்பான முழுமையான தகவல்களையும் ஆதாரங்களையும் வழங்கி வெளிநாட்டு ஊடக செய்திகளில் அவற்றை ஆதாரங்களாக வெளிப் படுத்துவது.

✓•வெளி நாட்டில் காணப்படுகின்ற அனைத்து முஸ்லிம் உறவுகளும் வெளிநாட்டு தூதரகங்களுக்கு முன்பாக ஒரு ஆர்ப்பாட்டத்தை இலங்கை வாழ் முஸ்லிம்களுக்காக உதவிக்கரம் கோரியும் பாதுகாப்பை உறுதிப்படுத்த இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாகவும் சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ளுதல்.

✓•விஷேடமாக இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம் அரசியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைவர்கள் உடனடியாக அவசரமாக வெளிநாட்டு தூதுவர்களை சந்திப்பை மேற்கொண்டு தற்போது நடக்கிறது சிங்கள அடிப்படைவாத இனவாதிகளின் செயற்பாடுகளை தெளிவுபடுத்தி அரசாங்கத்துக்கு அழுத்தங்களை பிரயோகித்து முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

ஆகவே மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளை நாம் அனைவரும் ஒன்றிணைந்து மேற்கொள்வதன் மூலம் தான் இனவாதிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தி அரசாங்கம் உடனடியாக சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

இங்கு இருக்கின்ற முஸ்லிம் அரசியல் தலைவர்களாலும், பாராளுமன்ற உறுப்பினர்களும், வெறும் பயனில்லாத அறிக்கைகளையும் பாராளுமன்றத்தில் வெறும் வீரப் பேச்சு களை மட்டும் தான் பேச முடியும் செயல்வடிவில் எதுவும் அமுல் படுத்தப் பட மாட்டாது இவர்களைப் பற்றி பெரும்பான்மை சமூகமும், பெரும்பான்மை அரசியல் தலைவர்களும் நன்றாக புரிந்து வைத்துள்ளார்கள் அதனால்தான் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான இந்த இனவாத செயற்பாடுகள் ஒவ்வொரு வருடமும் நடைபெறுவதற்குக் காரணமாக அமைகிறது.