வெளிநாட்டு சக்திகளே 19 ஆவது திருத்தத்தை கொண்டுவந்தன – உண்மையை கூறிய மைத்திரி

சிறிலங்காவில் தற்போது நடைமுறையில் உள்ள 19 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்வதற்கு வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களே அழுத்தங்களை கொடுத்ததாக சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறீசேன தெரிவித்துள்ளார்.

இன்று (26) ஊடகங்களிடம் பேசியபோது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தற்போது நடைமுறையில் உள்ள 19 ஆவது திருத்தச்சட்டமே நாட்டின் தற்போதைய அனர்த்த நிலைக்கு காரணம். எனவே எதிர்வரும் அரச தலைவர் தேர்தலுக்கு முன்னர் அதனை நீக்கவேண்டும்.

அரசியல் சட்டவாளர்களின் உதவியுடன் இந்த திருத்தம் எழுதப்பட்டபோதும், அதனை கொண்டுவருவதற்கு அரச சார்பற்ற நிறுவனங்களின் அழுத்தமே காரணம். ஆனால் இந்த திருத்தமே தற்போதைய அரசியல் குழப்பங்களுக்கு காரணம்.

தெரிவுக்குழுவின் முன் சமூகமளிக்குமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படும் செய்திகளில் உண்மையில்லை. அவ்வாறான அமைப்பு எனக்கு அனுப்பப்படவில்லை.

நாடாளுமன்றத் தெரிவுக்குழு என்பது ஒரு நாடகம், அதற்கான கதைவசனம் அலரிமாளிகையில் இருந்து எழுதப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.