வெற்றிபெற பௌத்த சிங்கள தேசியவாதத்தை பயன்படுத்தும் கோத்தா

இலங்கையின் சனத்தொகையில் 70 சதவீதமாக உள்ள பெரும்பான்மை   சிங்களவர்களின் வாக்குகளை பெறுவதற்காக கோத்தாபய ராஜபக்ச மிக அதிகளவிற்கு  பௌத்த சிங்கள தேசியவாதத்தை பயன்படுத்துகின்றார் என இந்தியாவின் நியுஸ் 18 தெரிவித்துள்ளது.

ஜிஆர் என அழைக்கப்படும்  கோத்தாபாய உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க ஐக்கியதேசிய கட்சி அரசாங்கம் தவறியது ,படையினரை துன்புறுத்தியது என இலங்கை முழுவதும் பிரச்சாரம் செய்கின்றார் எனநியுஸ் 18 தெரிவித்துள்ளது.

இலங்கையில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவேன் என  வாக்குறுதி அளிக்கும் அவர் பொருளாதார மந்த நிலைக்காக ஐக்கியதேசிய கட்சியை சாடுகின்றார் , உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சுற்றுலா துறை பாதிக்கப்பட்டுள்ளது  தனக்கு வாக்கு திரட்டுவதற்காக கோத்தபாயராஜபக்ச அதனை பயன்படுத்துகின்றார் எனவும் இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவிலும் அமெரிக்காவிலும் கல்விகற்ற 52 வயது சஜித் பிரேமதாச கறைபடியாதவர் என மக்கள் மத்தியில்தனக்குள்ள தோற்றத்தினையும் ஐக்கியதேசிய கட்சியின் அமைப்பு ரீதியான பலத்தினையும் கோத்தாபயவை தோற்கடிப்பதற்காக பயன்படுத்துகின்றார் எனவும் இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

கோத்தாபயவின் சிங்கள தேசியவாதத்தை எதிர்கொள்வதற்கு சஜித் பிரேமதாச அபிவிருத்தியை பயன்படுத்துகின்றார், அனைவருக்கும் அனைத்தும் என்ற வாக்குறுதியை வழங்குகின்றார் எனவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

சஜித் ராஜபக்ச எப்படியாவது வெற்றி பெற முயல்கின்றார்,அதன் காரணமாகவே அவர் சாத்தியமற்ற வாக்குறுதிகளை முன்வைக்கின்றார் அது கோத்தாபயவின் வாக்கு வங்கியில் பாதிப்பை ஏற்படுத்தலாம் ஆனால் வெற்றிபெற்றால் அவரால் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போகலாம் இது கோத்தாபய ராஜபக்சவிற்கும் பொருந்தும் என  அவரும் அனைத்து வாக்குறுதிகளையும் வழங்குகின்றார் என தனது பெயர் குறிப்பிட விரும்பாத சிரேஸ்ட அமைச்சர் தெரிவித்தார் என நியுஸ் 18 தெரிவித்துள்ளது.

கோத்தபாய சிங்களபேரினவாதத்திற்கு பெயர் பெற்றவர் என்பதால் சிறுபான்மை சமூகத்தினர் முழுமையாக சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகின்றது ஆனால் அவர்கள் மத்தியிலும் பிளவு காணப்படுகின்றது எனவும் இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் கிறிஸ்தவர்களின் வாக்குகள் சிதறுண்டுள்ளன அவர்களில் பலர் கோத்தாபயவை ஆதரிக்கின்றனர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பாதிக்கப்பட்ட முஸ்லீம்கள் அச்சமடைந்துள்ளனர் அவர்களிற்கு வேறு வழியில்லை அவர்கள் அதிகளவில் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிப்பார்கள் எனவும் இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

தமிழர்களின் வாக்குகளும் சிதறுண்டுள்ளது,இலங்கை தமிழர்கள் கோத்தாபயவின் கடும்போக்கு காரணமாக சஜித் பிரேமதாசவிற்கே அதிகளவில் வாக்களிப்பார்கள் ஆனால் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் ஆதரவை பெற்றுள்ளதன் மூலம் மலையக தமிழர்களின் வாக்குகளை கோத்தாபய ராஜபக்ச உடைத்துள்ளார் எனவும் இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

ஐக்கியதேசிய கட்சியின் மூலோபாயத்தினை உருவாக்குபவர்கள்  தங்களிற்கு 40 வீத வாக்குகள் உள்ளன ஏனைய பத்து வீத வாக்குகளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆதரவை பெறுவதன் மூலம் பெற முடியும் என  நம்புகின்றனர் எனவும் நியுஸ் 18 தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பெரும்பான்மையானஉறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவை ஆதரிக்கவில்லை,அவர்கள் காயப்படுத்தப்பட்டுள்ளனர் சீற்றத்தில் உள்ளனர்,என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின்  நெருங்கிய சகாவொருவர் சந்திரிகாவினால் பத்து இலட்சம் வாக்குகளை சஜித்திற்கு பெற்றுக்கொடுக்க முடியும் அதற்கு அதிகமாக அவர் பெற்றுக்கொடுத்தார் என்றால் அது இலங்கைஅரசியலில்  ராஜபக்சாக்களின் வரலாற்றை முடித்துவைக்கும் எனவும் அவர்தெரிவித்துள்ளார் எனவும் இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

தென்மாகாணத்திலும் ஊவா சப்பிரஹமுவலில் கோத்தாபாய ராஜபக்சவிற்கு சஜித் பிரேமதாசவை விட அதிக ஆதரவுள்ளது,மத்திய வடமத்திய மற்றும் மேல்மாகாணத்தில் இருவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகின்றது வடக்குகிழக்கு வடமேல்  மாகாணங்களில் சஜித் முன்னிலையில் உள்ளார் என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.