லண்டன் கத்திக்குத்தில் ஈடுபட்ட நபர் பாகிஸ்தான் பயங்கரவாதிகளிடம் பயிற்சி பெற்றவர்

லண்டனில் நடந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் , பாகிஸ்தானை மையமாகக் கொண்ட பயங்கரவாதிகளிடம் பயிற்சி மேற்கொண்டவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும்  லண்டன் பங்குச் சந்தையில் குண்டு வைக்க முயற்சி செய்த வழக்கில் 8ஆண்டு சிறைத்தண்டனை பெற்றவர்   என்பதும் தெரியவந்துள்ளது.

லண்டன் பிறிட்ஜ் அருகே குறித்த நபர் நடத்திய தாக்குதலில் 2பேர் உயிரிழந்துள்ளனர். 3பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட நபரை பொலிசார் சுட்டு வீழ்த்தினர். இந்தச் சம்பவம் லண்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லண்டன் பொலிசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பொலிஸ் தரப்பில் கூறப்படுவதாவது, பாகிஸ்தானில் பிறந்து பின் பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் உஸ்மான்கான் (28வயது). இவர் 2012இல் லண்டன் பங்குச் சந்தை அலுவலகத்தில் குண்டு வைக்க சதி செய்ததாக கைது செய்யப்பட்டார். தொடர்ந்து இந்த விசாரணையில் அவருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும் கான் இஸ்லாமிய கொள்கையில் நம்பிக்கை கொண்டவன்ர் என்றும், ஜிகாத்தை பின்பற்றி வாழ்ந்தவர் என்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. கான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயற்படும் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளார். அங்கு முழு அளவில் பயிற்சி எடுத்துள்ளான் என்ற தகவலும் உறுதியாகி உள்ளது. இவர் அல்குவைதாவுடன் தொடர்பில் இருந்தா ரா என்ற ஆதாரம் ஏதும் இல்லை. நேற்று நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்ட உஸ்மான், உடலில் போலியான வெடிகுண்டுகளைக் கட்டி வந்துள்ளார்.

01 லண்டன் கத்திக்குத்தில் ஈடுபட்ட நபர் பாகிஸ்தான் பயங்கரவாதிகளிடம் பயிற்சி பெற்றவர்