ரெம்டிசிவிர் மருந்து மிகவும் பயன் அளித்துள்ளது- ஆய்வாளர்கள்

ரெம்டிசிவியர் என்ற கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் தெளிவான பலாபலன்கள் கிடைத்துள்ளன என அமெரிக்காவின் ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்களிற்கான தேசிய நிறுவகம் தெரிவித்துள்ளது.

ரெம்டிசிவியர் என்ற மருந்தினை பயன்படுத்திய நோயாளிகள் ஏனைய மருந்துகளை பயன்படுத்தியவர்களை விட வேகமான குணமடைந்துள்ளனர் என அமெரிக்காவின் ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்களிற்கான தேசிய நிறுவகம் தெரிவித்துள்ளது.
ஏனைய மருந்துகளை விட இந்த மருந்து வேகமாக செயற்படுகின்றது என அமெரிக்க அமைப்பு தெரிவித்துள்ளது.

வேறு ஒரு மருந்து வழங்கப்பட்டவர்கள் குணமடைவதற்கு 15 நாட்களாகின ஆனால் ரெம்டிசிவியர் வழங்கப்பட்டவர்கள் 11 நாட்களில் குணமடைந்தனர் என அமெரிக்காவின் ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்களிற்கான தேசிய நிறுவகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைவதற்கான காலத்தை குறைப்பதில் இந்த மருந்து குறிப்பிடத்தக்க, தெளிவான பலாபலன்களை வழங்கக்கூடியது என்பதை புள்ளிவிபரங்கள் புலப்படுத்தியுள்ளன என அமெரிக்காவின் ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்களிற்கான தேசிய நிறுவகத்தின் தலைவர் அன்டொனி பௌசி தெரிவித்துள்ளார்.

இந்த மருந்தினால் வைரசினை கட்டுப்படுத்த முடியும் என்பது உறுதியாகியுள்ளது இதுவே முக்கிய விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.