ரஷ்ய தயாரிப்பு உலங்கு வானூர்திகளை சிறிலங்கா கொள்வனவு

சிறிலங்கா அரசாங்கம் ரஷ்ய தயாரிப்பு உலங்கு வானூர்திகளை வாங்க உள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அறிவித்துள்ளார்.

மொஸ்கோவில் நடைபெறும் “இராணுவம் 2019“  என்ற பாதுகாப்புக் கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ள அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மேலும் தெரிவிக்கையில், தங்களின் பாவனையில் இருந்த உலங்கு வானூர்திகளை தென்சூடானில் பணியில் இருக்கும் அமைதிப் படையினருக்கு வழங்கியதால், தமது தேவைகளுக்காக உலங்கு வானூர்திகள் தேவையாக உள்ளதாகவும், இதனாலேயே இந்த உலங்கு வானூர்தி கொள்வனவில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ரஷ்யாவின் M I – 17, மற்றும்  MI – 24 உலங்கு வானூர்திகள் மிகச் சிறந்தவை என்பது தெரிந்ததே. எனவே, அவற்றில் மேலும் சிலவற்றை கொள்வனவு செய்யவுள்ளோம் என அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்தார்.

பெரிய அளவிலான இராணுவ கருவிகளை வாங்குவதற்கு விற்பனையாளரிடமிருந்து நிதி உதவி உள்ளடங்கலாக ஒரு உடன்பாடு குறித்து பேச்சு நடத்த வேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.