யேமனில் போர் நிறுத்தத்தை அறிவித்தது சவுதி கூட்டணி

COVID-19 நோய்த்தொற்றை அடுத்து யேமனில் இரண்டு வார போர் நிறுத்தத்தை சவுதி தலைமையிலான கூட்டணி அறிவித்துள்ளது.

யேமனில் கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்ப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக போர் நிறுத்தத்தை நீட்டிக்க முடியும் என சவுதி கூட்டணி அறிக்கை வௌியிட்டுள்ளது.

யேமனுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட தூதுவரின் அழைப்பிற்கிணங்க இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு வார கால போர் நிறுத்த அறிவிப்பை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் வரவேற்றுள்ளார்.

எவ்வாறாயினும், சவுதி தலைமையிலான கூட்டணியின் அறிவிப்பில் தமக்கு முழுமையான ஈடுபாடு இல்லை என ஹவுதி கிளர்ச்சிக்குழு தெரிவித்துள்ளது.

யேமனில் கடந்த ஐந்து வருடங்களாக உள்நாட்டு போர் இடம்பெற்று வருவதுடன், இதில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.