மே 18 தமிழர் வரலாற்றில் உச்சம் தொட்ட தமிழின அழிப்பின் நினைவு நாள் -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

2020 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி – இன்றுடன் – முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நடைபெற்று 11 வருடங்கள் நிறைவடைகின்றது. காலம்காலமாக சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அடக்குமுறைகளுக்குள் ஈழத்தமிழினம் சிக்குண்டு பல்வேறு படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டனர். இத்தகைய இனப்படுகொலைகளின் உச்சம்தொட்டு ஈழத்தமிழர்கள் மிக மோசமாக 21 ஆம் நூற்றாண்டில் சர்வதேசம் பார்த்திருக்க முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட வலிநிறைந்த நினைவு நாளே இன்றாகும்.

இந்த வலிமிகுந்த நாளில் எமக்கு முன்னால் உள்ள தடைகளை உடைத்தெறிந்து நெஞ்சுறுதி கொண்ட வேங்கைகளாக ஒட்டுமொத்த உலகத் தமிழர்களும் “மூச்சோடும் வீச்சோடும் விடுதலையை வென்றெடுக்கும் வரை ஒருபோதும் ஓயோம்” என்ற ஓர்மத்துடன் கொல்லப்பட்ட எமது மக்கள்மீதும்இ எமது மண்ணின் விடுதலைக்காக இறுதி கணம் வரை போராடி தம்மை ஈகம் செய்த மாவீரர்கள் மீதும் உறுதியெடுத்து சுடர் ஏற்றுவோமாக என அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அறிக்கையை பின்வரும் இணைப்பில் காணலாம்.

அறிக்கை