மூன்றரை மாதங்களின் பின்னர் பாடசாலைகள் இன்று திறப்பு ; அதிபர், ஆசியர்கள் மட்டும் இன்று வருகை

கரோரோனா வைரஸ் தொற்று காரணமாக, மார்ச் 12ஆம் திகதி முதல் மூடப்பட்டிருந்த பாடசாலைகள், இன்று முதல் திறக்கப்படுமெனத் தெரிவித்துள்ள கல்வியமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்த, அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகக் குழுவின் உறுப்பினர்கள் மட்டுமே பாடசாலைகளுக்கு இன்று சமுகமளிப்பர் என்றார்.

கல்விச் செயற்பாடுகளை, சுகாதார வழிகாட்டல்களின் அடிப்படையில் ஆரம்பிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அதன் பின்னர், பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள், ஓகஸ்ட் 6ஆம் திகதி முதல் நான்குப் பிரிவுகளாக ஆரம்பிக்கப்படும் என்றார்.

“இந்தக் காலப்பகுதிக்குள் சமுக இடைவெளியுடன் வகுப்பறைகளை ஒழுங்குப்படுத்துதல், கைகளை கழுவுவதற்கான வசதிகள் ஏற்படுத்தல், பாதுகாப்புடன் கூடிய பாடசாலை வளாகத்தை அமைத்தல் உள்ளிட்டவை அவசியமாகுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

“கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னர், குறித்த சுகாதார வழிகாட்டல்கள் உரிய வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் கண்காணிக்கப்படும்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.