முல்லைத்தீவில் 15ஆயிரத்திற்கும் அதிகமானோர்க்கு சமுர்த்திக் கொடுப்பனவு

முல்லைத்தீவில் நீண்ட காலமாக வழங்கப்படாதிருந்த சமுர்த்திக் கொடுப்பனவு எதிர்வரும் 08ஆம் திகதி நடைபெறவுள்ள “நாட்டிற்காக ஒன்றிணைவோம்” நிகழ்வில் வைத்து வழங்கப்பட ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக சமுர்த்தி பணிப்பாளர் க.ஜெயபவானி தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் 3ஆயிரத்தி697 குடும்பங்களுக்கும், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 6ஆயிரத்து 11 குடும்பங்களுக்கும், மாந்தை கிழக்கில் 657 குடும்பங்களுக்கும், துணுக்காயில் 642 குடும்பங்களுக்கும், ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 1758 குடும்பங்களுக்கும், வெலிஓயா(மணலாறு) பிரதேசத்தில்878 குடும்பங்களுக்கும் என ஆக மொத்தம் 13ஆயிரத்து 643 குடும்பங்களுக்கான சமுர்த்தி திட்ட அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், எதிர்வரும் 08ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் முல்லைத்தீவில் நடைபெறும் ”நாட்டிற்காக ஒன்றிணைவோம்” நிகழ்வில் வழங்கப்படவுள்ளதாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.