Home செய்திகள் மலை­யக மக்­க­ளுக்­கான தேவை­களை நிறை­வேற்­று­வ­தற்கும் அபி­லா­சை­களை பூர்த்தி செய்­வ­தற்கும்  நட­வ­டிக்கை எடுப்பேன் – சஜித்

மலை­யக மக்­க­ளுக்­கான தேவை­களை நிறை­வேற்­று­வ­தற்கும் அபி­லா­சை­களை பூர்த்தி செய்­வ­தற்கும்  நட­வ­டிக்கை எடுப்பேன் – சஜித்

நான் கீழ் மட்­டத்­தி­லி­ருந்து அர­சி­ய­லுக்குள் பிர­வே­சித்­தவன். ஆகையால் மலை­யக மக்­களின் அன்­றாட வாழ்க்கைப் பிரச்­சி­னைகள், சமூக பொரு­ளா­தார அடிப்­படைத் தேவைகள் தொடர்பில் நன்கு அறிவேன். எனவே எல்­லை­க­ளையும் கடந்து மலை­யக மக்­க­ளுக்­கான தேவை­களை நிறை­வேற்­று­வ­தற்கும் அபி­லா­சை­களை பூர்த்தி செய்­வ­தற்கும்  நட­வ­டிக்கை எடுப்பேன்.

அவர்­க­ளது பிரச்­சி­னைகள் தொடர்­பி­லான ஜனா­தி­பதி செய­லணி  ஒன்றை நிறு­வு­வ­தற்கு எதிர்­பார்த்­துள்ளேன். என்னால் வழங்­கப்­ப­டு­கின்ற வாக்­கு­று­தி­களை எனது தலையை அடகு வைத்­தேனும் நிறைவேற் றுவேன் என்று ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ தெரி­வித்தார்.

ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் அமைச்சர் சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்கும் முன்­ன­ணியின் பங்­காளிக் கட்­சி­யான தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணிக்கும் இடை­யி­லான சந்­திப்பு நேற்று கொழும்பில் இடம்­பெற்­றது. இந்த சந்­திப்­பின்­போதே தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியால் முன்­வைக்­கப்­பட்ட கோரிக்­கை­களை அடுத்து வேட்­பாளர் அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ மேற்­கண்­ட­வாறு உறு­தி­ய­ளித்தார்.

தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான மனோ கணேசன் தலை­மையில் உப தலை­வர்­க­ளான அமைச்சர் பழனி திகாம்­பரம், அமைச்சர் வேலு­சாமி இரா­தா­கி­ருஷ்ணன், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான அரு­ணாச்­சலம் அர­விந்­த­குமார், வேலு­குமார், முன்னாள் மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான எம். உத­ய­குமார், எஸ். ஸ்ரீதரன் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் செய­லாளர் நாயகம் சந்­திரா சாப்டர், மலை­யக மக்கள் முன்­ன­ணியின் செய­லாளர் நாயகம் ஏ. லோரன்ஸ் உள்­ளிட்டோர் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

ஐக்­கிய தேசிய முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் தமிழ் முற்­போக்கு கூட்­டணி ஏற்­க­னவே வேட்­பாளர் அமைச்சர் சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தாக தீர்­மா­னித்­தி­ருந்த நிலை­யி­லேயே நேற்று வியா­ழக்­கி­ழமை இந்த சந்­திப்பு இடம்­பெற்­றி­ருந்­தது. இதன்­போது வேட்­பாளர் அமைச்சர் சஜித் பிரே­ம­தா­ஸ­வுடன்  பல்­வேறு விட­யங்கள் கலந்­து­ரை­யா­டப்­பட்­டி­ருந்­தன.

குறிப்­பாக தமிழ் முற்­போக்கு கூட்­டணி, மலை­யக மக்­களின் அடிப்­படை தேவைகள், வீட­மைப்பு சமூக பொரு­ளா­தார மேம்­பாடு, கல்வி, சுகா­தாரம் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் தொடர்பில் தெளி­வு­ப­டுத்தி தமது தரப்பு கோரிக்­கை­களை முன்­வைத்­தது. சக­ல­ரி­னதும் வெளிப்­ப­டுத்­தல்­க­ளையும் செவி­ம­டுத்த ஜனா­தி­பதி வேட்­பாளர் அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ குறிப்­பி­டு­கையில் , நான் கீழ் மட்­டத்­தி­லி­ருந்து அர­சி­ய­லுக்குள் பிர­வே­சித்­தவன்.

ஆகையால் மலை­யக மக்­களின் அன்­றாட வாழ்க்கைப் பிரச்­சி­னைகள், சமூக பொரு­ளா­தார அடிப்­படைத் தேவைகள் தொடர்பில் நன்கு அறிவேன். எனவே எல்­லை­க­ளையும் கடந்து மலை­யக மக்­க­ளுக்­கான தேவை­களை நிறை­வேற்­று­வ­தற்கு அபி­லா­சை­களை பூர்த்தி செய்­வ­தற்கும் அனைத்து பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்­வினை பெற்றுக் கொடுப்­ப­தற்கு உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்வேன்.

அது மாத்­தி­ர­மின்றி மலை­யக மக்­களின் அனைத்து பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்­வு­களை எட்டும் வகையில் ஜனாதிபதி செயலணி ஒன்றை நிறுவுவதற்கு எதிர்பார்த்திருக்கின்றேன். அதனூடாக பிரச்சினைகளை இலகுவாக அனுகுவதற்கும் தீர்வுகளை காண்பதற்கும் முடியுமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் என்னால் வழ்கப்படுகின்ற அனைத்து வாக்குறுதிகளையும்  எனது தலையை அடகு வைத்தேனும் நிறைவேற்றியே தீருவேன் என்றும் தெரிவித்துள்ளார்.