மரக்கறிகளின் விநியோகத்தை மட்டுப்படுத்த தீர்மானம்.

கொழும்பு மெனிங் சந்தையில் மொத்த வியாபாரத்திற்காக வெளிமாவட்டங்களில் இருந்து மரக்கறிகளை விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளன.

மொத்த வியாபாரிகள் சங்கத்தின் உப தலைவர் நிமல் அத்நாயக்க எமது செய்தி பிரிவுக்கு இதனைத் தெரிவித்தார்.

எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் வாரத்தில் மூன்று நாட்களுக்கு இந்த விநியோக நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, திங்கள், புதன், வெள்ளி ஆகிய தினங்களில் மாத்திரம் மொத்த வியாபார நடவடிக்கைகளுக்கு வெளிமாவட்டங்களில் இருந்து மரக்கறிகளை ஏற்றி சென்று விநியோகிக்கப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய நாட்களில் கையிருப்பில் உள்ள மரக்கறிகளை விற்பனை செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும்.

ஞாயிற்றுக்கிழமை மொத்த வியாபார சந்தை மூடப்படவுள்ளதுடன் அன்றைய தினம் கிருமி ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், மெனிங் சந்தையில் சி;ல்லறை முறையில் மரக்கரிகளை விற்பனை செய்வதற்கு இன்று முதல் முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் மொத்த வியாபாரிகள் சங்கத்தின் உப தலைவர் நிமல் அத்நாயக்க தெரிவித்துள்ளார்.