மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து புலனாய்வாளர்களால் அழைத்து வரப்பட்டவர்கள்

ஏப்ரல் 21 சம்பவத்துடன் தொடர்புடைய 5 பிரதான பயங்கரவாதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் வைத்து கைது செய்யப்பட்டு நேற்று அதிகாலை 4மணிக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். ஜெத்தாவிலிருந்து U L 82 விமானத்தில் அழைத்து வரப்பட்ட இவர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த 5 சந்தேக நபர்களில் ஒருவரான ஹயாத்து முகமட் அஹமட் மிஸ்கான் என்பவரே வவுணதீவு பொலிஸ்   சோதனைச் சாவடியிலுள்ள பொலிசாரால் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபராவார். 30 வயதான சந்தேக நபர், 45/5, S.B வீதி, புதிய காத்தான்குடி என்ற முகவரியைச் சேர்ந்தவர்.

இந்த மிஸ்கான் என்ற நபர் சஹ்ரானுடன் நெருக்கமாக இருந்தவர். மத்திய கிழக்கு நாடுகளில் மறைந்திருந்த வேளையில் கைதாகிய 30 வயதான முஹமட் மார்க்கோ பெலான்  522U  தங்கம் வீதி, அம்பாறை, மருதமுனை – 3 என்ற முகவரியைக் கொண்டவர்.

மற்றைய சந்தேக நபர் முஹமட் மொஹைதீன் மொஹமட் சன்பார்க் என்ற 44 வயதுடையவர். இவர் சஹாரஸ் கார்டன், வெல்லப்பிட்டியைச் சேர்ந்தவர். 29 வயதான மொஹமட் இஸ்மைல் மொஹமட் எல்ஹாம் காத்தான்குடி 1ஐச் சேர்ந்தவர். 4ஆவது சந்தேக நபரான 37 வயதுடைய அபுசாலி அபுபக்கர் உட்பட 5 பேராவார்.

இவர்களின் வீடுகள் சோதனையிடப்பட்டன. இவர்களின் உறவினர்கள் காவல்துறை நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டனர்.