மட்டக்களப்பில் தொடரும் மழை – பல பகுதிகளுக்கான போக்குவரத்துகள் பாதிப்பு

மட்டக்களப்பில் ஏற்பட்டுள்ள தொடர் அடை மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று விசேட அவசர கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

இதன்போது புனானை அணைக்கட்டில் நீர் அதிகரிக்குமானால் உடனடியாக 193 குடும்பங்கள் கிரான் பிரதேசத்தில் இருந்து பாதுகாப்பான இடங்களை கொண்டு செல்லப்பட வேண்டும் வேண்டுமெனவும் தெரிவிக்கப்படுள்ளது

மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் அடை மழை காரணமாக அணைக்கட்டுகளில் நீர் அதிகரித்து வருவதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேநேரம் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் எந்தநேரத்திலும் களத்தில் மக்களுக்கு சேவை செய்வதற்கு தயாராக இருக்கவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 301 குடும்பங்களைச் சேர்ந்த 799 நபர்கள் இதில் அடங்குகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தை பொருத்தவரையில் 6696 குடும்பங்களை சேர்ந்த22614பேர் இடம்பெயர்ந்து உறவினர்களின் வீடுகளிலும் தங்கியுள்ளார்.

batti flood1 மட்டக்களப்பில் தொடரும் மழை - பல பகுதிகளுக்கான போக்குவரத்துகள் பாதிப்புஇவர்களுக்கான நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருவதுடன் உலர் உணவுப் பொருட்களும் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வடமுனை ஊத்துச்சேனை ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்துகள் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளன.

batti flood2 மட்டக்களப்பில் தொடரும் மழை - பல பகுதிகளுக்கான போக்குவரத்துகள் பாதிப்புகுறித்த பகுதிக்கு செல்லும் பிரதான வீதியூடாக ஐந்து அடிக்கும் மேல் நீர் பாய்வதன் காரணமாக போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன.

இதனிடையேஇ மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ள நீரானது வடிந்தோட முடியாத வகையில் அடைத்து வைத்து உரிமைகோரும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மட்டக்களப்பு மாநகர முதல்வர் அறிவித்துள்ளார்.

batti flood4 மட்டக்களப்பில் தொடரும் மழை - பல பகுதிகளுக்கான போக்குவரத்துகள் பாதிப்புமட்டக்களப்பு மாநகர சபையின் 27 ஆவது சபை அமர்வானது நேற்று 05.12.2019 (வியாழக்கிழமை) காலை மாநகர முதல்வர் தியாகராசா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது. இவ் அமர்வில் பிரதி முதல்வர் க.சத்தியாசீலன்இ ஆணையாளர் கா.சித்திரவேல்இ மாநகர
சபையின் உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த அமர்வில் நிதிக்குழு உள்ளிட்ட குழுக்களின் சிபாரிசுகள்இ மாதாந்த வரவு செலவு அறிக்கை தொடர்பான விடயங்கள் மற்றும் மாதாந்த கொடுப்பனவு உட்பட கொள்வனவு விடயங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன் அதற்கான அனுமதிகளும் சபையில் வழங்கப்பட்டன.

அத்துடன் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை அடைமழையாக வலுவடைத்துள்ளதன் காரணத்தினால் வெள்ள நீரினை துரிதமாக வெளியேற்றும் வகையில் பல்வேறு ஆலோசனைகளும் உறுப்பினர்களால் சபையில் முன்வைக்கப்பட்டன.

குறிப்பாக வெள்ள நீரானது வடிந்தோட முடியாத வகையில் பலர் தோணாக்களையும், வடிகான்களையும் அடைத்து வைத்துள்ளமையால் வெள்ள நீரானது வடிந்தோட முடியாத நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டதுடன் அவ்வாறு சட்ட விரோதமாகவும்இ அனுமதியற்றும்
அடைத்து வைத்து உரிமைகோரும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மட்டக்களப்பு மாநகர முதல்வர் அறிவித்தார்.

அத்துடன் இவ் அனர்த்த நிலமைகளில் மாநகர சபையின் அபாயக் குறைப்பு மற்றும் முன் ஆயத்த குழுவானது எந்நேரமும் கடமையில் இருக்க வேண்டும் என்றும் மாநகர சபையில் கடமையாற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்கள் உட்பட ஊழியர்கள் அனைவரினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டு, அனைத்து உத்தியோகத்தர்களும் அனர்த்த அபாயக் குறைப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் இது தொடர்பான நிர்வாக நடைமுறைகளை ஆணையாளர் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

batti flood5 மட்டக்களப்பில் தொடரும் மழை - பல பகுதிகளுக்கான போக்குவரத்துகள் பாதிப்புஅனர்த்தம் ஏற்படும் காலங்களில் JBC இயந்திரம் டிராக்டர்கள் தொழிலாளர் உட்பட ஏனைய உபகரணங்களையும் 24 மணி நேரமும் தயார் நிலையில் வைத்திருப்பதோடு அனர்த்தம் சம்பந்தமாக கிடைக்கின்ற முறைப்பாடுகளை உடனுக்குடன் குழுவுக்கு அறியத் தருவதுடன், அவற்றை கிடைக்கின்ற ஒழுங்கில் பதிவு செய்து அதற்கேற்ப துரிதமாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஆணையாளருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.

அத்துடன் சிறீலங்கா அரசின் துணை இராணுவக் குழுவான பிள்ளையான குழு எனப்படும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் திரு.குமாரசாமி காந்தராஜாவினால் ஏனைய 10 உறுப்பினர்களின் கையொப்பத்துடன் கொண்டு வரப்பட்ட மாநகர முதல்வரின் நிதி அதிகாரங்களை மீள் பரிசீலனை செய்வதற்கான பிரேரணையானது 15 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. இதற்கு ஆதரவாக 25 வாக்குகளும் எதிராக 10 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன்இ இரண்டு வாக்குகள் நடுநிலையாகவும் இடப்பட்டிருந்தன.