மட்டக்களப்பில் கண்டனப் பேரணிக்கு அழைப்பு

எதிர் வரும் 30/08/2019 அன்று பன்னாட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரைக்கமைய உலகம் முழுதும் காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளாலும் மக்களாலும் அடையாளப்படுத்தலுடன் விழுப்புணர்வு செய்யப்படுகின்றது .

வடகிழக்கில் இந்திய ராணுவத்தாலும் அரசபடைகளாலும் அதனுடன் சேர்ந்தியங்கிய ஒட்டுக்குழுக்களாலும் கடந்த காலங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரை மீட்டுத்தருமாறும் அல்லது அவர்களுக்கு என்ன நடந்ததென்ற உண்மையை கூறும் படியுமான கேள்விகளுடனும் கண்ணீருடனும் உள்ளூர் முதல் உலகம் வரை அலைந்து திரியும் உறவுகளின் குரலுக்கு வலுச்சேர்க்கும் முகமாக வருகின்ற 30/08/2019 அன்று காலை 10.00 மணிக்கு மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து காந்தி பூங்கா வரையிலான கண்டனப்பேரணி ஒன்றை நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கண்டன பேரணிக்கு பொது அமைப்புகள்,பல்கலைகழக மாணவர் சங்கங்கள் ,பட்டதாரிகள் சங்கம் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் ,விளையாட்டுக்கழகங்கள் ,கிராம அபிவிருத்தி சங்கங்கள் ,மாதர் சங்கங்கள் ,தாணி (ஆட்டோ)ஓட்டுநர் சங்கங்கள் ,பல்சமைய ஒன்றியம்,வர்த்தக சங்கங்கள் ஆகியோரது ஆதரவையும் கோரி நிற்கின்றோம்.

அதே போலவே தமிழ் மக்களாகிய உங்களிடமும் தார்மீக ஆதரவை கோரிநிற்கின்றோம்.

வலிசுமந்த எங்கள் குரலுக்கு வலுச்சேர்க்க தமிழ் மக்களாகிய உங்கள் ஆதவை தந்து அன்றைய நாளில் பெரும் திரளாக கூடி சர்வதேசத்திடம் நீதி கேட்க துணையாக நிற்க வேண்டுகின்றோம்.

நன்றி
காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் .
மட்டக்களப்பு .