போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் சிரியாவில் வான் தாக்குதல்

சிரியாவில் 10 நாட்கள் போர் நிறுத்தம் அறிவித்திருந்த நிலையில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இது குறித்து சிரியாவின் போர் கண்காணிப்புக்குழு செவ்வாய்க்கிழமை கூறும் போது, “சிரியாவில் ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி முதல் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்நாட்டின் வடகிழக்கில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் பல்யானவர்கள் எண்ணிக்கை குறித்த விபரம் கிடைக்கவில்லை“ என்று தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்து சிரிய அரசுப் படைகள் தரப்பிலிருந்து இதுவரை எதுவித கருத்தும் வெளியாகவில்லை. சிரியாவில் அதிபர் ஆசாத்திற்கும், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்குமிடையில் கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வரும் சண்டை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன.

இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள கடைசி இடமான இட்லிப் மாகாணத்தில் இறுதிச் சய்டை நடந்து வருகின்றது. இந்த உள்நாட்டுப் போரில் இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இலட்சக் கணக்கான மக்கள் வேறு நாட்டிற்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.

சிரியாவில் நடந்து வரும் போரை முடிவிற்குக் கொண்டுவர ஐக்கிய நாடுகள் சபை, வளர்ந்த நாடுகளைத் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.