போர்க் களமான தொழில்நுட்பக் கல்லூரி: மாணவர் மோதலில் உதவிக்கு வந்த ரவுடிக் குழு

கொக்குவில் தொழில் நுட்பக் கல்லூரியில் பயிலும் இரண்டு மாணவர்களுக்கு இடையேயான மோதல் நிலை வன்முறையாக மாறியதால் விரிவுரையாளர்கள் மூவர் தலைக் கவசத்தால் தாக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அவசர பொலிஸ் பிரிவுக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மாணவாகள் இருவருக்கிடையில் தார்க்கம் உருவாகியுள்ளது. இதனையடுத்து கல்லூரி வளாகத்திற்குள்ளேயே இரு மாணவர்களும் மோதலில் ஈடுபட்டிடனர்.

இதனையடுத்து மோதலில் ஈடுபட்ட மாணவாகளில் ஒருவா வெளியில் இருந்து ரவுடிக்கும்பல் ஒன்றை உள்ளே அழைத்தார். அவர்கள் தொழிநுட்பக் கல்லூரிச் சுவர் ஏறி பாய்ந்து உள்ளே நுழைந்து மோதலில் ஈடுபட்டனர்.

இதனை அவதானித்த ஆசிரியர்கள் சிலர் மோதலில் ஈடுபட்டவர்களைத் தடுக்க முயன்றபோது அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 3 ஆசிரி- யர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகினர். இதனையடுத்து வெளியிலிருந்து தாக்குதல் நடத்த உள்ளே நுழைந்த ரவுடிகளில் ஒருவனை ஆசிரியர்களும், மாணவர்களும் இணைந்து மடக்கிப்பிடித்தனர். அதனை தொடர்ந்து சுமார் 15 தொடக்கம் 20 ரவுடிகள் வாள்களுடன் தொழிநுட்பக் கல்லூரிக்குள் பிடித்து வைக்கப்பட்டிருந்த ரவுடியை மீட்பதற்கு முயற்சித்துள்ளனர்.

இதற்குள் பொலிஸாரும், இராணுவத்தினரும் சம்பவ இடத்துக்கு வந்ததால் ரவுடிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பின்னா மடக்கி பிடிக்கப்பட்ட ரவுடியையும், மோதலில் ஈடுபட்டிருந்த மாணவன் ஒருவனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். மேற்படி சம்பவத்தையடுத்து தொழிநுட்பக் கல்லூரிச் சுற்றாடலில் இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு பதற்ற நிலைகாணப்பட்டது.