போராட்ட நியாயத்தை ஆய்வுகள் மூலம் அடையாளப்படுத்தும் ”பிரபாகரன் சட்டகம்”

பிரபாகரன் சட்டகம் என்ற நூலொன்றை எதிர்வரும் மே 18 மாதம் வெளியிடவிருப்பதாக குறித்த நூலின் வெளியீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில்,

இனிவரப்போகும் தலைமுறைக்கு எமது தேசிய தலைவரினதும், போராட்டத்தினதும் நியாயத்தினை ஆய்வுகள் மூலம் அடையாளப்படுத்தவேண்டிய வேலையை நமது தலைமுறை செய்துவிடவேண்டும். அவ்வகையில் எதிர்வரும் மே 18 அன்று வெளியிடப்படவிருக்கும் ஒரு நூலே ‘பிரபாகரன்சட்டகம்’

இம்முயற்சியில் எம்மோடு இணைந்து இந்நூலை தனது எழுதி மாபெரும் பணியை ஒப்புவித்திருக்கும் கலாநிதி சு.சேதுராமலிங்கம் அவர்கள்; கனடாவின் மெமோரியல் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், அமெரிக்காவின் கிளெம்சன் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டமும் பெற்ற சிறப்புக்குரியவராவார்.

இன அழிப்பினூடாகத் தமிழீழ நடைமுறை அரசு அழிக்கப்பட்ட பின்பாக புலிகளின் பக்கம் நின்று அவர்களது நியாயத்தையும், அறத்தையும்,ஓர்மத்தையும், இறைமையையும்,பரிமாணங்களையும்,உத்திகளையும் கோட்பாட்டுருவாக்கம் செய்யும் முதல் நூல் என்ற பெருமையைத் தனதாக்கிக் கொள்கிறது.