பொறுப்புக்கூறப்படுதல், மனித உரிமைகளிற்கு மதிப்பளித்தல் போன்ற கடப்பாடுகளை உறுதிசெய்யுங்கள் – அமெரிக்கா

பொறுப்புக்கூறப்படுதல், மனித உரிமைகளிற்கு மதிப்பளித்தல் போன்ற கடப்பாடுகளை உறுதிசெய்யுங்கள் உறுதி செய்யுமாறு அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ இலங்கையின் புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்கா இலங்கை மக்களை அவர்களின் ஜனநாயக தேர்தலிற்காக  பாராட்டுகின்றது என தெரிவித்துள்ள மைக்பொம்பியோ இலங்கையின் புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றுவதற்கு அமெரிக்கா ஆர்வமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு துறை சீர்திருத்தம்,பொறுப்புக்கூறப்படுதல், மனித உரிமைகளிற்கு மதிப்பளித்தல்,மீண்டும் வன்முறை நிகழாமை ஆகிய இலங்கை அரசாங்கத்தின் கடப்பாடுகளை மதிக்குமாறு இலங்கையின் புதிய ஜனாதிபதியை கேட்டுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

சுதந்திரமான நேர்மையான வெளிப்படையான ஜனாதிபதி தேர்தல் மூலம் இலங்கை தொடர்ந்தும் தனது ஜனநாயகத்தின் வலுவை வெளிப்படுத்தியுள்ளது என மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார்.