பொருளாதார அரசியல் – தமிழ் மக்கள் கருத்தில் எடுக்கவேண்டிய தருணமிது- வேல்ஸ் இல் இருந்து அருஸ்

ஆங்கில புது வருடமானது பிறந்த சில தினங்களுக்குள் உலகில் பல சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. மத்தியகிழக்கு மற்றும் வட ஆபிரிக்க நாடுகளில் 60,000 துருப்புக்களைக் கொண்ட அமெரிக்கா ஈரனுடனான ஒரு வலிந்த போரை ஆரம்பிக்கும் வண்ணம் தாக்குதலை நடத்தியது ஒருபுறம் இருக்க ஈரான் அதற்கு பதிலடியாக ஏவுகணைகளை ஈராக்கில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஏவியுள்ளது.

இவ்வாறு உலக அரசியல் மிகவும் உறுதியற்ற தன்மையில் இருக்கையில் சிறீலங்காவின் அரசியல் ஏப்பிரல் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பில் தனது கவனத்தைக் குவித்துள்ளது.

1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நிறைவேற்று அதிகாரமுள்ள அரச தலைவர் பதவியை மீட்டு எடுப்பதில் தீவிரமாக உள்ளார் புதிய அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சா. அதாவது எல்லா அதிகாரங்களும் உள்ள பதவி அவருக்கு வேண்டுமாம்.

2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 19ஆவது திருத்தச்சட்டம் என்பது இரட்டை இயந்திரம் கொண்ட அரசியல் பொறிமுறை எனவும், அதனால் சிறீலங்காவின் அரசியல் உறுதித்தன்மை ஆட்டங்கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள கோத்தபாயா தனது பதவிக்கு மேலும் அதிகாரங்களைச் சேர்ப்பதற்கன முயற்சிகளில் இறங்கியுள்ளார்.

அதாவது நவம்பர் மாதம் இடம்பெற்ற அரச தலைவர் தேர்தலில் வெற்றியீட்டியதுபோல பௌத்த சிங்கள மக்களின் வாக்குகளை கொண்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுவிடலாம் என அவர் எண்ணுகின்றார். எனவே தான் கோத்தபாயாவினதும், சிறீலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சாவினதும் அண்மைய உரைகள் அனைத்தும் பௌத்த சிங்களத்தை அதாவது மகாவம்ச சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டனவாக உள்ளன. Gotha kneel down in front Buddist monks Mahinda standing பொருளாதார அரசியல் - தமிழ் மக்கள் கருத்தில் எடுக்கவேண்டிய தருணமிது- வேல்ஸ் இல் இருந்து அருஸ்

எதிர்வரும் தேர்தலில் அவர் முன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுவிட்டால் தமிழ் மக்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் இருந்த சிறிய அதிகாரமும் இல்லாது போய்விடும்.

அதாவது விடுதலைப்புலிகளின் ஆயுதப்போர் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் இனம் தனது அரசியல் அதிகாரத்தை முற்றுமுழுதாக இழந்துள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.

இந்த நிலையில் தமிழ் மக்களுக்கான அரசியல் அதிகாரத்தை பெற்றுக்கொடுப்பதற்கு இந்தியா முயற்சிக்குமா? என்ற கேள்விகள் அண்மைக்காலமாக எழுந்துள்ளன. ஆனால் அதற்கான சாத்தியங்கள் இல்லை என்பதை இந்திய வெளிவிவகார அமைச்சரின் கருத்தும், பேராசிரியர் கரோரி சிங் அவர்களின் கருத்தும் எடுத்துரைக்கின்றன.

சிறீலங்காவின் உள்நாட்டு விடயத்தில் இந்தியா தலையிடாது, இந்தியாவுக்கும் சிறீலங்காவுக்குமான உறவு என்பது நான்கு பரிமாணங்களைக் கொண்டது, 1980 களில் அது ஆபத்தான உறவு, 1990 களில் அது சில வேற்றுமைகள் கொண்ட உறவு, 2000 ஆம் ஆண்டுகளில் இந்த உறவு ஒத்துழைப்பாக மாறியது, 2010 ஆண்டில் இருந்து அது பங்குதாரர்களாக மலர்ந்துள்ளது என விபரித்துள்ளார் ராஜஸ்த்தான் பல்கலைக்கழகத்தின் தென்னாசியா பிராந்தியத்தின் கற்கை நெறிக்கான தலைவர் பேராசிரியர் சிங்.Jaysangar Gunawardana பொருளாதார அரசியல் - தமிழ் மக்கள் கருத்தில் எடுக்கவேண்டிய தருணமிது- வேல்ஸ் இல் இருந்து அருஸ்

அதாவது 13 ஆவது திருத்தம் என்பது சிறீலங்காவைப் பொறுத்தது, சிறீலங்கா நிறைவேற்றினால் அதனை நாம் கண்டுகொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தச்சட்டத்தில் கொண்டுவரப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைப்பை சிறீலங்காவின் உயர் நீதிமன்றம் 2006 ஆம் ஆண்டு பிரித்தபோதும், இந்தியா அது தொடர்பில் எந்த கருத்தையும் வெளியிடவில்லை.

அதனை மீண்டும் இணைப்பதற்கு இந்தியா உதவவேண்டும் என்ற கோரிக்கைகள் 2017 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்டபோது, அதனை இந்திய வெளிவிவகார அமைச்சர் கருத்தில் எடுக்கவில்லை என்பதுடன், தற்போது பல வழிகள் திறக்கபட்டுள்ளன. அவற்றின் ஊடாக தமிழ் மக்கள் தமக்கான அரசியல் தீர்வைத் தேடவேண்டும் என அவர் தெரிவித்திருந்தார்.

அதாவது உள்ளக அரசியலில் தமிழ் மக்களின் பேரம்பேசும் சக்தி முற்றாக முடங்கிப்போயுள்ளதாகவே கருதப்படுகின்றது. உள்ளக அரசியலில் தோற்கடிக்கப்பட்டால் நாம் அடுத்த என்ன நகர்வை மேற்கொள்ள வேண்டும் என்பது தான் எமக்கு முன்னுள்ள கேள்விகள்?

இரண்டு ஒருங்கிணைந்த தெரிவுகளே உள்ளன, அனைத்துலக அரசியலின் ஊடாக பூகோள அரசியலில் எமக்கான பாதையை தேடவேண்டும், அதேசமயம் சீரழிந்து வரும் சிறீலங்காவின் பொருளாதாரத்தை மேலும் பாதாளத்திற்குள் தள்ள வேண்டும்.

ஆரசியல் பலத்தில் சிறீலங்கா பெரும் வெற்றியீட்டினாலும், பொருளாதாரத்தில் சிறீலங்கா மிகப்பெரும் தோல்வியை சந்திக்கும் நிலையிலேயே உள்ளது. அதன் பொருளாதார வளர்ச்சி 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் 2.7விகிதமாகவே உள்ளது.

அடுத்துவரும் 12 மாதங்களுக்கு சிறீலங்கா 6 பில்லியன் டொலர்களை கடன் மீள் செலுத்தும் நிதியாக செலுத்த வேண்டும். ஆனால் சிறீலங்காவின் கையிருப்பில் உள்ள நிதியானது 6.5 பில்லியன் டொலர்களே. இதனை கடனைச் செலுத்த பயன்படுத்தினால் சிறீலங்காவின் நிதி நிலை மிகவும் பாரதூரமான நிலையை அடையலாம் எனத் தெரிவிக்கின்றனர் சிறீலங்காவின் பொருளியல் நிபுணர்கள்.0411 பொருளாதார அரசியல் - தமிழ் மக்கள் கருத்தில் எடுக்கவேண்டிய தருணமிது- வேல்ஸ் இல் இருந்து அருஸ்

இதனை ஈடு செய்வதற்கு வர்த்தகத்துறையில் சிறீலங்காவுக்கு புதிய பாதை ஏதும் உண்டா என்று பார்த்தால் 30 ஆண்டுகளுக்கு முன்னர் வர்த்தகத்துறையின் வரைபடத்தில் இல்லாது இருந்த வியட்னாம் தற்போது சிறீலங்காவுக்கான மிகப்பெரும் போட்டியாளராக மாற்றம் பெற்றுள்ளது. தொழில்நுட்பத்தில் பின்தங்கியுள்ள சிறீங்காவின் இடத்தை அது கச்சிதமாகப் பிடித்துள்ளது. யப்பான் உட்பட பல உலக நாடுகளின் அதிக முதலீடுகள் தற்போது வியட்னாமை நோக்கியே திரும்பியுள்ளன.

வியட்னாமின் உயர் தொழில்நுட்டத்துறையின் ஏற்றுமதி 2017 ஆம் ஆண்டில் 41 விகிதம், ஆனால் சிறீலங்காவின் ஏற்றுமதி 1 விகிதம்.

அதாவது கடன் அடிப்படையில் வேறு நாடுகளைச் சார்ந்து நிற்கும் நிலைக்கு சிறீலங்கா தள்ளப்பட்டு வருகின்றது.

சிறீலங்காவுடன் நெருக்கமான பிணைப்புக்களைக் கொண்ட இந்தியாவே 450 மில்லியன் டொலர்களை கடனாகவே வழங்கியுள்ளது. அமெரிக்காவின் மிலேனியம் சலஞ் உடன்பாட்டின் நிதியும் 440 மில்லியன் டொலர்கள் தான் ஆனால் அதற்காக அமெரிக்கா சிறீலங்காவிடம் கேட்பது, அமெரிக்கப் படையினர் ஆயுதங்களுடன் சிறீலங்காவின் எந்தப் பகுதியிலும் எந்த நேரத்திலும் தரையிறங்கலாம், சிறீலங்காவின் எந்த சடத்திற்கும் அவர்கள் உட்பட மாட்டார்கள். அது மட்டுமல்லாது, சிறீலங்காவின் எல்லா துறைமுகங்களையும், தளங்களையும் அவர்கள் தடையின்றி பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதே.

அதாவது தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுக்கள் வரும்போது தனது இறைமை தொடர்பில் அதிகம் பேசும் சிங்களத் தலைவர்கள் தற்போது தாம் பட்ட கடனுக்கான வட்டியை கட்டுவதற்கே நாட்டின் இறைமையை விற்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே தான் எதிர்வரும் ஏப்பிரல் 4 ஆம் நாளுக்கு முன்னர் மிலேனியம் சலஞ் உடன்பாட்டை கிழித்து எறிவதற்கு தற்போதைய அரசு தயாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார், சிறீலங்காவின் புதிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா.

விடுதலைப்புலிகளின் போர் வியூகங்களில் கூட படைத்துறையும், பொருளாதாரமும் இலக்குகளாக இருந்தன. கட்டுநாயக்கா வான்படைத்தளத்திற்கு வழங்கப்பட்ட முக்கியத்துவமே அனைத்துலக விமானநிலையம் மீதான தாக்குதலுக்கும் வழங்கப்பட்டது. மத்திய வங்கி, உல்லாசப்பயணத்துறை என்பவற்றை அவர்கள் குறிவைத்ததும் சிறீலங்காவின் பொருளாதாரத்தை முடக்குவதற்காகவே.airportsla016kd பொருளாதார அரசியல் - தமிழ் மக்கள் கருத்தில் எடுக்கவேண்டிய தருணமிது- வேல்ஸ் இல் இருந்து அருஸ்

நாம் ஒன்றை மட்டும் சிந்திக்க வேண்டும், பௌத்த அடிப்படைவாத சிந்தனையில் மூழ்கிப்போயுள்ள சிறீலங்கா அரசு தென்னிலங்கை அரசியலில் பெற்ற பலத்தைப் போல பொருளாதாரத்திலும் பெறுமாக இருந்தால் தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போர் மிகப்பெரும் பின்னடைவைச் சந்திக்கும். அதனை முறியடிப்பதற்கான வழிகளைத் தேடுவதற்கோ அல்லது வியூகங்களை வகுப்பதற்கோ எம்மிடம் வளங்கள் உள்ள.

தமிழ் சமூகத்திடம் பெருமளவான பொருளியல், இராஜதந்திர நிபுணர்கள் உள்ளனர். அவர்கள் தமது வளங்களை ஒருங்கிணைக்க வேண்டிய தருணமிது.