புனித ஞாயிறு தாக்குதலாளிகளுக்கு இந்தியாவே பயிற்சி வழங்கியது- சிறீலங்கா இரணுவம், ஆனால் அமைச்சர் மறுக்கிறார்

சிறீலங்காவில் கடந்த ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலை இந்தியாவில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகளே மேற்கொண்டதாகவும், இந்த தாக்குதலை இந்தியாவே மேற்கொண்டதாகவும் சிறீலங்கா இராணுவத்தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கா தெரிவித்திருந்தார்.

ஆனால் அதனை தற்போது சிறீலங்காவின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்கா மறுத்துள்ளார். சிறீலங்காவின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்தியா சென்றுள்ள அமைச்சர் அங்கு ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே கடந்த வெள்ளிக்கிழமை (16) இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆனால் தாக்குதலாளிகளில் பலர் இந்தியாவின் கஸ்மீர், கேரளா மற்றும் பெங்களுர் பகுதிகளில் பயிற்சிகளை பெற்றிருந்ததாகவும் இந்த தாக்குதலில் இந்தியாவின் மறைமுகமான தொடர்புகள் இருந்துள்ளது எனவும் சிறீலங்கா இராணுவத்தளபதி முன்னர் தெரிவித்திருந்தார்.

ஆனால் சிறீலங்காவின் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யவும், இந்தியாவின் உதவியை அதற்கு பெறுவதற்காகவும் சென்ற அமைச்சர் அதனை மறுத்துள்ளதோடு தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்கள் சிறீலங்காவிலேய இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தாக்குதலின் பின்னர் மிகவும் பாதிப்படைந்த சிறீலங்காவின் சுற்றுலாத்துறை தற்போது முன்னைய நிலைக்கு திரும்பியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.