பிரதிநிதிகள் சபையில் அமெரிக்க அதிபரை பதவிநீக்கும் தீர்மானம் – சபாநாயகர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிராக அவர் மீது பதவி நீக்க தீர்மானத்தை பிரதிநிதிகள் அவை கொண்டுவரவுள்ளதாக அந்த அவையின் சபாநாயகரான நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.

ஜனநாயக கட்சியை சேர்ந்த நான்சி பெலோசி இது குறித்து கூறுகையில், ”அதிபர் மீதான பதவி நீக்க தீர்மானம் குறித்த நடவடிக்கைகளை தொடங்கிட பிரதிநிதிகள் அவையின் தலைவரை நான் இன்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

பிரதிநிதிகள் அவையின் முக்கிய கமிட்டி அமைப்பு டிரம்புக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிப்பது குறித்த பரிசீலனை செய்து கொண்டிருப்பதாக செய்தி வந்த மறுநாளில் இந்த கருத்தை நான்சி பெலோசி வெளியிட்டுள்ளார்.

தன் மீது பதவிநீக்க தீர்மானம் கொண்டு வருவதாக இருந்தால் அதனை விரைவாக நடத்துமாறு ஜனநாயக கட்சியிடம் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

நான்சி பெலோசியின் மேற்கூறிய கருத்துக்கள் வெளிவருவதற்கு சற்று முன்னர் தனது ட்விட்டர் பதிவில் கருத்து வெளியிட்ட டொனால்ட் டிரம்ப்,

”என் மீது நீங்கள் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வருவதாக இருந்தால், அதனை விரைவாக, உடனடியாக கொண்டு வாருங்கள். அப்போதுதான் செனட்டில் நியாயமான விசாரணை நடக்க வாய்ப்பு இருக்கும். நாட்டு மக்களும் தங்களின் வழக்கமான கடமையை செய்வதற்கு ஏதுவாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

நவம்பர் மாத தொடக்கத்தில் டொனால்ட் டிரம்பை பதவி நீக்குவது தொடர்பான நடைமுறைகளை தொடங்கும் தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையில் நிறைவேறியது,