பதற்றத்துடன் மீண்டும் திறக்கப்படும் கொழும்பு பங்குச்சந்தை

ஏறத்தாள ஒரு மாதமாக மூடப்பட்டிருந்த சிறீலங்காவின் பங்குச்சந்தை நாளை (11) முதல் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஊரடங்குச்சட்டம் காரணமாக மார்ச் 16 ஆம் நாள் மூடப்பட்ட பங்குச்சந்தை ஏப்பிரல் 22 ஆம் நாள் திறக்கப்படும் என்று கூறப்பட்டபோதும், அது திறக்கப்படவில்லை.

எனினும் பெரும் சரிவை பங்குச்சந்தை சந்தித்துவருவதால் 10 விகித வீழ்ச்சி கண்டால் சுயமாக பங்குச்சந்தை நிறுத்தப்படும் பொறிமுறைகளை சிறீலங்கா அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் பிற்பகல் 2.30 மணியுடன் பங்குச்சந்தை வர்த்தகம் மூடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.