அச்சத்தில் சிறீலங்கா படையினர் – தென்னிலங்கையில் துப்பாக்கிப் பிரயோகம்

கடந்த ஏப்பிரல் மாதம் சிறீலங்காவில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்கள் சிறீலங்கா படைத்தரப்பையும், அரச தரப்பையும் கடுமையான அச்சத்திற்குள் தள்ளியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிக அச்சத்துடன் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் சிறீலங்கா படையினர் பல இடங்களில் துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இன்று (11) காலை தென்னிலங்கையில் உள்ள வத்தளை குனுபிட்டியா பகுதியில் சிறீலங்கா படையினரின் சோதனை நிலையத்தில் நிற்காமல் சென்ற வாகனம் ஒன்றின் மீது சிறீலங்கா கடற்படைனர் மேற்கொண்ட துப்பாக்கித் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இதனிடையே, பிறிதொரு இடத்தில் சோதனை நிலையத்தில் நிறுத்தாமல் சென்ற வாகனத்தின் மீது கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மேலும் ஒரு சாரதி படுகாயமடைந்துள்ளதாக சிறீலங்கா கடற்படைப் பேச்சாளர் லெப். கொமாண்டர் இசுறு சூரியபண்டாரா.