நெதர்லாந்தை மகிழ்ச்சிப்படுத்த கொழும்பில் மோட்டார் கார் அற்ற தினம்

அனைத்துலக நாடுகளுடன் இணைந்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் சில திட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாக தனது இராஜதந்திர நல்லுறவுகளை பலப்படுத்தி வருகின்றது சிறீலங்கா அரசு.

அதன் ஓரங்கமாக இலங்கையில்  முதல் தடவையாக மோட்டார் கார்கள் அற்ற தினம் ஒன்றை பிரகரடனம் செய்ய கொழும்பு மாநகரசபை தீர்மானித்துள்ளது. கொழும்பிலுள்ள நெதர்லாந்து தூதரகம் இதற்கு ஒத்துழைப்பை வழங்கும்.

இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் 14ஆம் திகதி காலை 6மணி முதல் நண்பகல் 12 மணிவரை கொழும்பு – 07 சுதந்திர மாவத்தையிலிருந்து கிறீன்பாத் வரை இடம்பெறவுள்ளது.

குறித்த காலப்பகுதியில் கால்நடையாகவோ சைக்கிள்கள் மூலமாகவோ பயணிக்க முடியும் என கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனநாயக்க தெரிவித்துள்ளார்.