நீதிக்கான பயணத்தில் பேதமின்றி அணிதிரளுங்கள் -யாழ், கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள் கூட்டாகக் அறைகூவல்

தமிழர் தாயகத்தின் இருவேறு இடங்களில் எதிர்வரும் 30ஆம் திகதி வலிந்து காணா மலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய கவனயீர்ப்பு போராட்டத்திற்கு முழுமையான ஆதரவினை வழங்கவுள்ளதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும், கிழக்கு பல்கலைக்கழக மாணவர் கலைப்பீட மாணவர் ஒன்றியமும் அறிவித்துள்ளன.

அத்துடன் வலிந்து காணாம லாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் நீதிக்கான போராட்டத்திற்கு பல்கலைக்கழக மாணவர்கள் முழுமையாக பங்கேற்கவுள்ள தைப்போன்ற ஏனைய அனைத்து தரப்பினரும் பேதங்களை மறந்து அணிதிரளுமாறும் அறைகூவல் விடுத்துள்ளன. எதிர்வரும் 30ஆம் திகதி சர்வதேச காணாமலாக்கப்பட்ட தினம் தாயகத்தில் உணர்வெழிச்சியுடன் நினைவு கூரப்படவுள்ளது. இதன்போது, வடக்கிலும் கிழக்கிலும் இறுதிப்போரின்போது படைகளிடத்தில் சரணடைந்தும், ஒப்படைத்தும், காணாமலாக்கப்பட்டவர்கள், மற்றும் அசாதா ரண சூழலில் பல்வேறு தருணங்களில் காணாமலாக்கப்பட்டவர்கள் என அனைவருக்கும் என்ன நடந்தது என்பதற்கான பதிலை சிறீலங்கா அரசாங்கம் கூறவேண்டும். இதிலிருந்து விலகி நிற்கவே முடியாது.

பொறுப்புக்கூறலிலிருந்து தான் தப்பித்துக்கொள்வதற்காக சிங்களப்பேரினவாத சிறிலங்கா அரசு தொடர்ந்தும் தனது ஏமாற்று வித்தைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் சர்வதேசம் உடனடியாக இவ்விடயத்தில் தலையீடு செய்து காணாமலாக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை விரைந்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவதற்கு வலிந்து காணாமலாக்கப் பட்டவர்களின் உறவினர்கள் தீர்மானித்துள்ளனர். இதற்காக, தாயகத்தில் வட புலத்தில் வவுனியா பன்றிக்கெய்தகுளத்தில் இருந்து உறவுகளை படையினரிடத்தில் கையளித்த ஓமந்தை சோதனைச்சாவடி இருந்த இடம்வரையும் பேரணியாக செல்லவுள்ளனர். அதேபோன்று கிழக்கில் கல்முனையில் தரவைப்பிள்ளார் ஆலயத்திலிருந்து போராட்ட பேரணியை ஆரம்பித்து கல்முனை வடக்கு தமிழ்ப்பிரிவு பிரதேச செயலாளர் செயலகம் வரையில் செல்லவுள்ளனர்.

இந்நிலையில்,யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் வவுனியாவில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்று தமது ஒத்துழைப்பினை வழங்கவுள்ளதோடு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கல்முனை போராட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பினை அடுத்துவரும் சில தினங்களில் வெளியிடவுள்ளதாகவும் இரு மாணவர் ஒன்றியங் களும் அறிவித்துள்ளன.

மேலும் நீதிகோரும் சமூகத்தின் நியாயங்களை புரிந்து அனைவரும் பாகுபாடின்றியும் இடையூறுகளை ஏற்படுத்தாதும் ஒன்றிணைந்து சர்வதேசத்தின் கவனத்தினை ஈர்த்து காணாமலாக் கப்பட்டோருக்கான விடயத்தில் உரிய தீர்வுக்காக முன்னகர்த்தலை இத்தருணத்தில் முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகவுள்ளதாகவும் அம்மாணவர் ஒன்றியங்கள் சுட்டிக் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.