நிரந்த மக்கள் தீர்பாயம் பற்றி உங்களுக்கு தெரியுமா? – கலாநிதி ந.மாலதி

ஈழத்தமிழர் இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டார்கள், இன்றும் படுகிறார்கள் என்பதை உலகு அங்கீகரிக்க வேண்டும் என்று உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் கூக்குரலிட்டபடி உள்ளார்கள். இன்றுவரை இதற்கு செவிசாய்க்கும் தமிழரல்லாதவர்கள் மிகவும் குறைவாகவே உள்ளார்கள். விதிவிலக்காக இருப்பது நிரந்த மக்கள் தீர்பாயம் (நிமதீ). நிமதீயை பற்றி உங்களுக்கு தெரியுமா?

பிரித்தானியாவை சேர்ந்த பெட்ரான்ட் ரசல், பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ஜீன் போல் சாட்டே போன்ற பல மேதைகள், வியட்நாம் போரில் இழைக்கப்பட்ட கொடுமைகளை 1966-67களிலும், லத்தீன் அமெரிக்காவில் இழைக்கப்பட்ட கொடுமைகளை 1973-76களிலும், தீர்ப்பாயம் அமைத்து விசாரணை செய்தார்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக, சர்வதேசத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களின் குரலாக, இதுவே பின்னர் ஒரு நிரந்தரமான அமைப்பாக 1979ம் ஆண்டு இத்தாலியிலுள்ள ரோம் நகரில் நிரந்தர மக்கள் தீர்ப்பாயமாக (நிமதீ) நிறுவப்பட்டது. இன்றுவரை 45 அமர்வுகளில் சர்வதேசத்தால் புறக்கணிக்கப்பட்ட பல கொடுமைகளை விசாரணை செய்துள்ளது.

நிமதீயின் இலங்கை அமர்வு ஆரம்பம்

2002 போர்நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து இடம்பெற்ற பேச்சு வார்த்தைகள் நல்ல விளைவை கொண்டு வரவேண்டுமென்று, தமிழர் போராட்டத்தின் நியாயத்தை புரிந்துகொண்ட ஐரோப்பாவிலிருந்த சில நாடுடத்தப்பட்ட சிங்களவர்களும், ஐரோப்பியர்களும் கடினமாக உழைத்தார்கள். 2006இல், போர் உக்கிரமடைந்த போது, முன்னர் பேச்சு வார்த்தைகளுக்கு ஆதரவு வழங்கிய ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்தும் பேச்சு வார்த்தைக்கு ஆதரவு வழங்கும்படி இவர்கள் வேண்டினார்கள். ஆனால் பிரித்தானிய-ஐ‑அமெரிக்க அழுத்தங்களால் ஐரோப்பிய நாடுகளும் போரை ஆதரிக்க ஆரம்பித்தன. தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டுக்கொணடிருந்த 2009ம் ஆண்டு காலத்தில், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும், ஏனைய அரசசார்பற்ற அமைப்புக்களும் கூட, போருக்கு பின்னரான காலத்தைப் பற்றியே பேசின.

வலிமையுள்ள சர்வதேச அமைப்புக்கள் தமிழருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை விசாரிக்க போவதில்லை என்று உணர்ந்தே மேற்குறிப்பிட்ட சிங்கள், ஐரோப்பிய ஆர்வலர்கள் நிமதீயை நாடினார்கள். ஈழத்தமிழர்களின் போராட்டத்தை ஆதரிக்கும் சிங்களவர்களும், ஐரோப்பியர்களும் சிலரேயானாலும், இருக்கிறார்கள் என்று ஈழத்தமிழருக்கு நிரூபிக்கவும் இவர்கள் விரும்பினார்கள்.

நிமதீயின் முதலாவது இலங்கை அமர்வு

முள்ளிவாய்க்கால் அழிவு நடந்து ஒரு ஆண்டு முடிவதற்குள்ளேயே, 2010 சனவரி மாதத்தில் முதலாவது அமர்வு அயர்லாந்திலுள்ள டப்ளின் நகரத்தில் நடந்தது. அயர்லாந்து நாட்டு ஆர்வலர்களே இதற்கான ஒழுங்குகளை செய்தார்கள். ஜெர்மனியிலுள்ள ”சர்வதேச மனித உரிமை அமைப்பு” விசாரணை செய்ய வேண்டிய குற்றப்பத்திரிகையை தாயார் செய்தது. விசாரிக்க வேண்டிய குற்றங்களில் ”போர் குற்றங்களும்”, ”சமாதானத்திற்கு எதிரான குற்றமும்” உள்ளடங்கியிருந்தன.

இதற்கான சாட்சியங்களாக முள்ளிவாய்கால் அழிவுகளை நேரில் கண்ட பல ஈழத்தமிழர்கள் இரகசியமாக வரவழைக்கப்பட்டார்கள். மேலும் பல நிபுணர்கள், சிங்களவர்களும், தமிழர்களும், ஐரோப்பியர்களும், இந்தியர்களும் சாட்சிகள் வழங்கினார்கள். ஈழத்தமிழரின் பல சாட்சியங்கள், அவர்களின் பாதுகாப்பு கருதி இரகசியமாகவே விசாரிக்கப்பட்டன.

இந்த அமர்வில் குற்றங்களை விசாரித்த குழுவில் பத்து சர்வதேச நிபுணர்கள் இருந்தார்கள். இவர்களைப் பற்றி. டானியல் ஃபியர்ஸ்டீன் ஆர்ஜன்டீனாவின் புவனஸ் ஆய்ரஸ் பல்கலைக்கழகத்தில் இனவழிப்பு பிரிவில் பேராசிரியர். டெனிஸ் ஹலிடே ஐநாவின் உதவி செயலாளராக இருந்து பின்னர் அது இராக்கின் மேல் போட்ட பொருளாதார தடைகளை எதிர்த்து ஐநா பதவியிலிருந்து விலகினார். ஃபிரான்சுவா ஹுற்றாட் கத்தோலிக்க பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருந்தார். 2017இல் இகுவடோரில் பல்கலைகழகத்தில் பணிசெய்து கொண்டிருந்த போது காலமானார்.

மேரி லோலர் டப்ளினை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர். ஃபிராசெஸ்கோ மார்டோனே இத்தாலி நாட்டை சேர்ந்த ஆர்வலர். நவால் சடாவி எகிப்து நாட்டை சேர்ந்த பெண்களுக்காக போராடும் ஆர்வலர். ராஜேந்தர் சச்சார் முன்னாள் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி. இந்தியாவின் பொட சட்டத்திற்கு எதிராக போராடினார். ஏப்பிரல் 2018இல் காலமானர். சுலக் சிவரக்சா தாய்லாந்த சேர்ந்தவர். புத்த சமயத்தையும் சமூக மாற்றங்களையும் பற்றி நிறைய நூல்கள் எழுதியவர். தாய்லாந்து புத்த சமயத்தை அரச சமயமாக்குவதை எதிர்தார். ஜீயானி ரொன்யோனி நிமதீயின் செயலாளர் நாயகம். நோர்வேயை சேர்ந்த ஓய்ஸ்ரைன் ரிவேற்றர் சர்வதேச சட்டங்கள் அறிந்த நிபுணர்.

மேலே குறிப்பிட்ட நிபுணர்கள், டப்ளின் நகரில் இடம்பெற்ற இவ்வமர்வின் தீர்ப்பில், சிறிலங்கா அரசின் மேல் சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளில், போர்குற்றங்கள் இடம்பெற்றிருக்கிறது என்று தீர்ப்பு வழங்கினார்கள். அத்துடன் இனவழிப்பு குற்றம் பற்றி மேலும் ஆராயப்பட வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார்கள். சமாதானத்திற்கு எதிரான குற்றம் பற்றி இவ்வாறு விளக்கினார்கள்.

சமாதானத்திற்கு எதிராக குற்றம்நிபுணர்கள் சொன்னது

இவ்வாறான ஒரு குற்றத்திற்கு தெளிவாக வரையறைகள் செய்ய முடியாது. இக்குற்றச்சாட்டை விசாரிப்பதாக இருந்தால், இதற்கு முன்னர் சமாதானம் இருந்துள்ளதாக ஏற்றுக்கொள்ள வேண்டும். யார் முதலில் சமாதானத்தை உடைத்தார்கள் என்று தீர்மானிப்பதில் பிரச்சனைகள் உள்ளன. இருந்தாலும் வழங்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில், தமிழ் மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு, சர்வதேச சமூகம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்ல என்பதை நிமதீ ஏற்றுக்கொள்கிறது. சில ஐநா அங்கத்துவ நாடுகளின் அழுத்தங்கள் காரணமாக, ஐநாவும் இப்போரில் இடம்பெற்ற குற்றங்களை ஆராய்வதற்கு தகுந்த ஒரு கமிசனை இதுவரை உருவாக்கவில்லை

ஐரோப்பிய ஒன்றியம் போர்நிறுத்த ஒப்பந்த காலத்தில் விடுதலைபுலிகளை தடைசெய்ததும் கண்டிக்கப்பட வேண்டியது. இதுவே, இலங்கை அரசு போரை மீண்டும் ஆரம்பிக்கவும், மாபெரும் அழிவுகளை ஏற்படுத்தவும் வழி செய்தது. அமெரிக்காவின்பயங்கரவாதத்திற்கு எதிரான போரும்சிறிலங்கா அரசு மோசமாக நடந்து கொள்வதற்கு உந்துதலாக இருந்துள்ளது.

பிரேமன் அமர்வு 2013 டிசம்பர்

டப்ளின் அமர்வுக்கு நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், டப்ளின் அமர்வில் இருந்த நீதிபதிகளில் நால்வருடன் (டானியல் ஃபியர்ஸ்டீன், டெனிஸ் ஹலிடே, ஜீயானி ரொன்யோனி, ஓய்ஸ்ரைன் ரிவேற்றர்), மேலும் எட்டு நிபுணர்கள் கொண்ட, 12 நிபுணர்கள் குழு, ஜெர்மனியிலுள்ள பிரேமன் என்னும் நகரில் அமர்ந்து சாட்சிகளை கேட்டது. இம்முறை இனவழிப்பு குற்றச்சாட்டையும் அத்துடன் பிரித்தானியா, அமெரிக்கா, இந்தியா ஆகிய மூன்று நாடுகளும் இனவழிப்புக்கு துணைபோனது என்ற குற்றச்சாட்டிற்கான சாட்சியங்களையும் நிபுணர்கள் கேட்டார்கள்.

இவ்வமர்வில் இருந்த நிபுணர்கள், இனவழிப்பு நடந்தது என்றும், தொடர்ந்தும் நடக்கிறது என்றும் தீர்ப்பு வழங்கினார்கள்.

பிரித்தானியா இனவழிப்புக்கு துணைபோனது என்ற குற்றச்சாட்டிற்கான சாட்சியங்கள் கொடுக்கப்பட்டன. காலனிய காலத்திலிருந்தே திருகோணமலை துறைமுகத்தில் அதற்குள்ள தேவையினால் தமிழர் உரிமைகளை தொடர்ச்சியாக புறந்தள்ளியது என்றும், ஆயுத போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு சிறிலங்கா இராணுவத்திற்கு பல உதவிகளை செய்தது என்றும், சிறிலங்கா இராணுவத்தின் கட்டுபாடற்ற பல மீறல்களை தெரிந்து கொண்டும் பிரித்தானியா தொடர்ந்து உதவிகள் கொடுத்தது என்றும் சாட்சிகள் கொடுக்கப்பட்டன.

அமெரிக்காவிற்கு எதிரான சாட்சியங்களாக, உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தை அமெரிக்காவில் விடுதலைபுலிகளை அழைக்காமல் வைத்ததும், போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையிலிருந்த காலத்தில் விடுதலைப்புகளை தடைசெய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழுத்தம் கொடுத்ததும் சாட்சியங்களாக வைக்கப்பட்டனஇவற்றைவிட மேலும் பல நடப்புக்கள் இதற்கான சாட்சியாக வைக்கப்பட்டன. பிரித்தானியாவும், அமெரிக்காவும், பேச்சுவார்த்தைகளை வேண்டுமென்றே குழப்பி, இனவழிப்புக்கு துணைபோயின என்ற தீர்ப்பையும் அமர்விலிருந்த நிபுணர்கள் வழங்கினார்கள்.

இந்தியா மேலுள்ள குற்றச்சாட்டிற்கு, போதிய ஆதராங்கள் சமர்ப்பிக்க படவில்லை என்றும், மேலதிக ஆதராங்கள் சமர்ப்பிக்க கோரியும் தீர்ப்பளித்தார்கள்.

இத்தீர்வின் தமிழாக்கத்தை இங்கே பெற்றுக்கொள்ளலாம்

http://www.ptsrilanka.org/wp-content/uploads/2017/04/ppt_final_report_web_ta.pdf

 

பிரேமன் அமர்விலிருந்த நிபுணர்களின் விபரங்கள்

கப்ரியலே டெல மோர்த்தே,me நிரந்த மக்கள் தீர்பாயம் பற்றி உங்களுக்கு தெரியுமா? - கலாநிதி ந.மாலதிமிலான் கத்தோலிக்க பல்கலைகழகத்தில், சர்வதேச சட்டங்களின் பேராசியராக உள்ளார். ஜெனீவாவின், சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபின சட்டங்களுக்கான அகடமியிலும் (2007-2008) பேராசிரியராக இருந்தார். ருவாண்டாவுக்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக (2003-2004) பணியாற்றினார். பழைய யூகோசுலாவியாவிற்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அலுவலகத்தில் (2000) பணியாற்றினார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (1998)                                            அமைப்பதற்கு அமர்த்தப்பட்ட அரச குழுவிலும் இருந்தார்.

ஹுசே எலியேஸ் எஸ்றவே மொல்ற்றோ,eli நிரந்த மக்கள் தீர்பாயம் பற்றி உங்களுக்கு தெரியுமா? - கலாநிதி ந.மாலதி

இஸ்பெயினிலுள்ள வலன்சியா பல்கலைகழகத்தில் சர்வதே சட்ட பேராசிரியராக பணியாற்றுகிறார். திபெத் பற்றிய சட்ட நிபுணர்.  திபெத்திலும், பர்மாவிலும் இழைக்கப்பட்ட குற்றங்களை ஆய்வு செய்து  இவற்றிற்கான  குற்றப்பத்திரிகையை தாயாரித்தார்

 டானியல் ஃபியர்ஸ்டீன்,dani நிரந்த மக்கள் தீர்பாயம் பற்றி உங்களுக்கு தெரியுமா? - கலாநிதி ந.மாலதி ஆர்ஜன்டீனாவின், ற்ரேஸ் டி ஃபெப்ரேரோ பல்கலைகழகத்தின், இனவழிப்பு கற்கை மையத்தின் பணிப்பாளராகவும், புவனஸ் ஆய்ரஸ் பலகலைகழகத்தின் இனப்படுகொலை பீடத்தின் பேராசிரியராகவும், ஆர்ஜன்டீனாவின் தேசிய ஆய்வாளர் மையத்தின் உறுப்பினராகவும் உள்ளார். சர்வதேச இனவழிப்பு கற்கை நிபுணர்களின் மையத்தின் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

 

செவனே கர்பியன்,karpion நிரந்த மக்கள் தீர்பாயம் பற்றி உங்களுக்கு தெரியுமா? - கலாநிதி ந.மாலதி சர்வதேச இனவழிப்பு சட்ட நிபுணர். ஜெனீவா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராகவும், சுவீடனின் நியுசெடெல் பல்கலைக்கழகத்தில் சட்ட தத்துவத்திலும், சர்வதேச குற்ற சட்டங்களிலும் விரிவுரையாளராகவும் பணியாற்றுகிறார். சட்டங்கள் அரசுகள் இழைக்கும் குற்றங்களை கையாளுவது பற்றி கவனம் செலுத்துகிறார்.

ஹேகர் கலுக்,kaluk நிரந்த மக்கள் தீர்பாயம் பற்றி உங்களுக்கு தெரியுமா? - கலாநிதி ந.மாலதி மத்திய கிழக்கு பற்றி ஆய்வு செய்யும் கல்விமான். இவரது அரசியல் வேலைகளுக்காக துருக்கியால் சிறையிலடப்பட்டவர். குர்திஸ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பவர்.

 

 ஜாவியர் கிரல்டோ மொரீனோ, javi நிரந்த மக்கள் தீர்பாயம் பற்றி உங்களுக்கு தெரியுமா? - கலாநிதி ந.மாலதிகொலம்பியாவின் பொகொட்டாவில் வாழும் ஒரு இறையியல்வாதி, மனித உரிமைகள் ஆர்வலர். இனவழிப்பால் பாதிக்கப்பட்ட சமூகங்களை ஆய்வு செய்தவர். நிமதீயின் உதவி தலைவராகவும் உள்ளார்.

  

ஜீயானி ரொன்யோனி jiyani நிரந்த மக்கள் தீர்பாயம் பற்றி உங்களுக்கு தெரியுமா? - கலாநிதி ந.மாலதிநிமதீயின் செயலாளர் நாயகம்

 

 

 

 

டெனிஸ் ஹலிடே,denis நிரந்த மக்கள் தீர்பாயம் பற்றி உங்களுக்கு தெரியுமா? - கலாநிதி ந.மாலதி ஐநாவின் உதவி செயலாளராக இருந்து பின்னர் அது இராக்கின் மேல் போட்ட பொருளாதார தடைகளை எதிர்த்து ஐநாவில் 34 வருடஙங்கள் வகித்த பதவியிலிருந்து விலகினார். சர்வதேச காந்தி சமாதான பரிசு பெற்றவர்.

 

  

 மன்ஃபிரட் உறின்ஸ்,manpi நிரந்த மக்கள் தீர்பாயம் பற்றி உங்களுக்கு தெரியுமா? - கலாநிதி ந.மாலதி ஜெர்மனியின், பிரேமன் பல்கலைக்கழகத்தில், பொது சட்டம், அரசியல் சமூகவியல், சட்டத்தின் சமூகவியல் ஆகிய துறைகளில் பேராசியராக உள்ளார். ஆபிரிக்காவில், முக்கியமான நம்பிபியாவிலும், மேற்கு சகாராவிலும் இடம்பெற்ற விடுதலைப்போராட்டங்களுடன் நெருங்கிய உறவுகளை பேணினார். நம்பிபியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியாக பணியாற்றிய போது, அதன் மனித உரிமை மற்றும் சனநாயகத்திற்கான யுனேஸ்கோ பேரரசிரியர் பதவியையும் வகித்தார்.

ஹெலன் ஜாவிஸ்,javis நிரந்த மக்கள் தீர்பாயம் பற்றி உங்களுக்கு தெரியுமா? - கலாநிதி ந.மாலதி கம்போடியா தீர்பாயத்தின், பொதுமக்கள் பிரிவின் தலைவராக பணியாற்றியவர்.

 

 

  

ஓய்ஸ்ரைன் ரிவேற்றர் ,

oisti நிரந்த மக்கள் தீர்பாயம் பற்றி உங்களுக்கு தெரியுமா? - கலாநிதி ந.மாலதி சர்வதேச சட்ட நிபுணர். நிமதீயின் பிலிப்பைன்ஸ் பற்றிய அமர்வின் உறுப்பினராகவும் இருந்தார்

 

 

 மோங் ஸார்ணி, sarni நிரந்த மக்கள் தீர்பாயம் பற்றி உங்களுக்கு தெரியுமா? - கலாநிதி ந.மாலதிபர்மாவில் சனநாயகம் சார்ந்த செயற்பாட்டாளர். 1995இல் சுதந்திர பர்மா கூட்டணியை நிறுவினார். ரோகிங்யா முசுலீம்களுக்கு எதிரான வன்முறைகளை வெளிப்படையாக எதிர்க்கும் ஒருசில பர்மா அறிவுசீவிகளில் ஒருவர். இதுவிடயமாக ஆன் சங் ஸுசியை பகிரங்கமாக கண்டித்தவர்.