நாட்டிலுள்ள மூன்று குழுக்களுக்கு தடை – வர்த்தமானி அறிவிப்பு

சிறிலங்காவின் அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்டிருக்கும் வர்த்தமானி அறிவிப்பொன்றில், தேசிய துவேத ஜமா அத் (N T J) , ஜமாத் மில்லாத் இப்ராஹஜம் (J M I) மற்றும் வில்லாய்ட் அஸ் செலிணி ஆகிய 3 குழுக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க அவசரகாலச் சட்டத்தின் 75 ( 1 ) ஒழுங்கின் கீழ், அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த வர்த்தமானி அறிவிப்பை அவர் விடுத்துள்ளார்.

இந்த அறிவிப்பில் ஆளில்லா விமானங்கள், ட்ரோன்கள் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

முப்படையினர், மற்றும் காவல்துறையிலுள்ளோர் தவிர ஏனையோர்  இவற்றை பயன்படுத்த முடியாது. கடந்த மாதம் பொது மக்கள் போக்குவரத்து ஆணையமும் (C A A)  இதே அறிவித்தலை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.